ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 19 அக்டோபர், 2025

ஒரு நதியின் பயணம் போல..

 


ஒரு நதியின் பயணம் போல

வாழ்க்கையை வாழ்ந்து விட்டு போவதில்

அப்படி ஒன்றும் கஷ்டம் இல்லை

உங்களுக்கு...

அது உங்களை எவ்வித சிரமமும் 

இல்லாமல் ஏந்தி

அந்த கரையின்

அற்புதத்தை காட்ட நினைக்கிறது.. 

 நீங்களோ அந்த வாழ்வெனும் நதியோடு

பிணக்கம் கொள்கிறீர்கள்...

பாவம் அது என்ன செய்யும்

நீங்கள் அந்த அற்புதத்தை

காணாமலேயே அதற்குள் அடங்கி 

மூழ்கி போகும் போது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:13/10/25

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை...

அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட  முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...