அந்த நகர காடுகளின்
வெப்பத்தில் தகிக்கிறது...
இந்த பிரபஞ்சம்...
அதோ அங்கே நகர காடுகளிடமிருந்து
தப்பி பிழைத்த
ஒற்றை மரத்தின் நிழலில்
அடைக்கலமாகி
இந்த அகோர பசிக் கொண்ட
மனிதர்களை பற்றி
ஆயிரம் புகார்களை
தனது மொழியில்
ஒப்புவித்து அங்கே தனது கூட்டில்
இரவின் சூட்சமத்தில்
அமைதிக் கொண்டு
அந்த குருவி
உறங்க போவதை பார்த்து
அங்கே இருந்த காலமோ
மென்மையாக விசிறி
தாலாட்டு பாடுகிறது
அந்த தாலாட்டில்
இந்த பிரபஞ்சமே
பேரமைதி கொண்டு உறங்கி கிடக்கிறது...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:19/10/25.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக