அர்த்தங்களற்று பிடிபடாமல்
திரிகிறது வாழ்க்கை...
அதன் ருசிக்கொரு எல்லை
இங்கே எவரும் அப்படி வகுத்து விட
முடியாது...
இங்கே எந்த ருசியும் தேவையில்லை
என்று அமர்ந்து
அந்த நதியை வேடிக்கை
பார்க்கும் என்னையும்
சலனப்படுத்த ஓசை எழுப்பி
அது முடியாமல்
அலுத்துக் கொண்டு போகும் வேகத்தில்
அங்கே பலபேர்
அதன் ஆக்ரோஷமான சுவைக்கு
அடிமையாகிறார்கள்...
இது தான் அதன் சுபாவம் என்று
நான் சற்றே திரும்பி புன்னகைத்து விட்டு
மீண்டும் அந்த நதியை
ரசிக்கிறேன் அவர்களை பற்றிய
எந்தவொரு உறுத்தலும் இல்லாமல்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:29/10/25.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக