ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

அந்த வேடிக்கை மனிதர்களும் விசித்திர காக்கையும்...


வாழ்வின் நிலையாமை 

விளிம்பில் சக்கையாக 

பிழியப்பட்டு தூக்கி வீசப்பட்ட 

கரும்பை போல 

உணர்வுகளற்ற நிலையில் 

அந்த பரபரப்பான சாலையில் 

ஓடிக் கொண்டிருக்கும் 

வேடிக்கை மனிதர்களை 

சுவாரஸ்யமாக கா கா என்று 

கத்தி கூப்பாடு போட்டு 

கேலி செய்கிறது அந்த ஒரு விசித்திரமான காக்கை!

அந்த சத்தத்தை கேட்டு விட்டு 

அந்த குடியிருப்பில் வசித்து வரும் நடுத்தர வயதுடைய பெண்மணி மூச்சு வாங்க படியேறி கொஞ்சம் சோறு எடுத்து வந்து அந்த கான்கிரீட் தளத்தின் ஒரு மூலையில் வைப்பதை பார்த்து விட்டு 

மீண்டும் கீழே அந்த சாலையில் 

நடக்கும் வேடிக்கை மனிதர்களை பார்த்து கா கா என்று கரைந்து கூப்பாடு போட்டு விட்டு நிதானமாக 

அந்த சோறை சாப்பிட்டு விட்டு 

ஒரு பருக்கையை அங்கே அந்த சாலையை நோக்கி கீழே மேலிருந்து 

நழுவ விடுகிறது...

அந்த சோற்று பருக்கை ஒட்டிக் கொண்ட மேலாடையினூடே 

அந்த மனிதர் தமது வாகனத்தில் பயணம் செய்கிறார் எந்த உணர்வுகளும் இன்றி...

பெரும் நிகழ்வுகளையே

உணர்வற்று பயணிக்கும் வேடிக்கை மனிதர்களுக்கிடையே

இந்த இலேசான சோற்று பருக்கை ஏதாவது அதிர்வை ஏற்படுத்தி விடும் என்று 

நம்பி கேலி செய்யும் 

அந்த காக்கைக்கு இது தெரியாமல் இருப்பதே ஒரு வரம் அல்லவா...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:27/08/25/புதன்கிழமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்றைய தலையங்கம்: யார் குற்றவாளிகள்?

  #இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...