ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 4 ஆகஸ்ட், 2025

நான் ஒரு நாடோடி...

 

நான் ஒரு நாடோடி!

இன்று இங்கே

நாளை எங்கே என்று

என்னால் அறுதியிட்டு

சொல்ல முடியாது!

நீயோ ஆதவனே

எப்போதும் ஒரே திசையில்

எழுந்து மறைந்து

என்ன பிழைப்பு என்று

நீ நினைத்தாலும்

உன்னை 

உனது தர்மம் அவ்வளவு

எளிதாக விடப்போவது இல்லை!

நானோ உனது வெளிச்சத்தில்

எப்போதும் எங்கும் இருப்பேன்!

இதோ இந்த திசையில் தான்

நான் பயணிக்க வேண்டும்

என்று எவரும் 

எனக்கு கட்டளை இடமுடியாது!

என்னை அவ்வளவு எளிதாக

கடந்து செல்பவர்கள்

உன்னை விடாமல்

விமர்சனம் செய்கிறார்கள்

என்ன கொடுமை?

தர்மத்தை கேள்வி கேட்க

இங்கே ஆயிரம் பேர்

அதர்மத்தை அப்படியே

கடந்து செல்ல

இங்கே லட்சம் பேர்!

இதுதான் கலிபுருஷனின் 

நியதி!

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 04/08/25/திங்கட்கிழமை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்றைய தலையங்கம்: யார் குற்றவாளிகள்?

  #இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...