ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2025

அந்த மலையோர சாரலில்...


அந்த மலையோர சாரலில் 

நாம் கணக்கற்ற கணங்கள் 

பேசி திரிந்த காலம் 

கடந்து சென்று இன்றோடு 

பல வருடங்கள் ஆகிறது...

இதோ அதே இடத்தில் தற்போது 

நான் மட்டும் நாம் சந்தித்த இடத்தில் 

நிற்கிறேன்...

அங்கே இன்னும் உன் நினைவுகளை 

சுமந்து 

அன்று செடியாக இருந்தது 

தற்போது மரமாக நிற்கிறது 

அந்த செடியை வருடிக் கொண்டே 

நீ பேசிய பொழுதுகளை அன்று 

செடியாக இருந்த மரம்

இன்னும் மறக்கவில்லை...

என்னை போல அதுவும் 

உன்னை மறக்காமல் என்னிடம் 

கேட்கிறது...

நீ எங்கே என்னை விட்டு சென்றாய் 

என்று எனக்கே தெரியாமல் 

இருக்கும் போது 

அந்த மரத்திற்கு என்ன பதில் 

சொல்வேன்...

அந்த கேள்வியை எதிர் கொண்டு 

திணறிய போது 

என் நிலைமையை புரிந்து 

தன் மெல்லிய காற்றால் எனக்கு 

ஆறுதல் தந்ததில் 

நான் உணர்ந்துக் கொண்டேன் 

இந்த உலகில் இன்னும் 

ஜீவனோட்டம் உள்ள 

உயிர்களோடு தான் 

நான் பயணித்து கொண்டு 

இருக்கிறேன் என்று 

சற்றே ஆறுதல் அடைந்து 

அந்த மரத்திற்கு விடை பெறும் முன் 

ஒரு முத்தமிட்டு கண்ணீரோடு 

பயணிக்கிறேன்...

மீண்டும் அங்கே நிச்சயமாக 

வருவேன்...

உன் நினைவுகளை 

ஸ்பரிசிக்க அல்ல 

அந்த உயிரோட்டம் உள்ள ஜீவனை 

ஸ்பரிசம் செய்வதற்காக...

#இளையவேணிகிருஷ்ணா

நாள் 06/08/25/புதன்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை...

அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட  முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...