கையில் மிதக்கும் கனவில்
ஓராயிரம் ஆசைகள்
அசைந்தாடி என்னை
தாலாட்டி மகிழ்கிறது...
அந்த கனவு நனவாகுமோ
நசிந்து சாம்பலாகுமோ
தெரியாது...
இருந்தும்
அந்த தாலாட்டின் இசையில்
என் ஆசைகள்
துளிர்த்து விடும் என்று
நம்பிக்கையோடு காத்திருக்கும்
கனவிற்கு இங்கே இருக்கும்
ஒரே ஆறுதல் அதுதானே என்று
நான் என்னை
ஆசுவாசப்படுத்திக் கொண்டு
பயணிக்கிறேன்...
இங்கே ஆறுதலிலேயே
பாதி கனவுகள் பலித்து விட்ட
திருப்தி தான் என்னை மேலும்
உற்சாகமாக பயணிக்க வைக்கிறது...
வேறென்ன சொல்ல?
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:02/09/25/செவ்வாய்க்கிழமை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக