உன் உஷ்ண விழி பார்வையில்
அங்கே தமது பார்வையை
பறி கொடுத்து விட்டு
உன் மீது கொண்ட பெரும் காதலை
உணர்த்த வந்தவர்கள்
தாங்க இயலாமல்
ஒரு பித்து நிலையில்
அலைந்து திரிபவர்கள்
ஏராளம் ஏராளம்...
அதை உணர்ந்து சற்றே
நான் திகைத்து நிற்கிறேன்...
அந்த சமயத்தில்
நீ யதேச்சையாக
என்னை பார்த்து புன்னகை
பூத்து போகிறாய்...
நான் அந்த பார்வையின்
குளுமையின் தீட்சண்யத்தை
தாங்க முடியாமல்
வேறு பக்கம்
திரும்பிக் கொண்டேன்...
இந்த பார்வை தான் அத்தனை
மனிதர்களின் விழிகளின்
ஒளியை பறித்துக் கொண்டதா என்று
நம்ப முடியாமல்
தவித்து நிற்கும் போது
மீண்டும் நீ அங்கிருந்து
போய் விட்டாயா என்று சற்றே
திரும்பி பார்க்கிறேன்...
நீயோ அந்த புன்னகை
பூத்த பார்வையை இன்னும்
என் மீது பதித்து அப்படியே
நிற்கிறாய்...
நீ அப்படி பார்க்காதே...
அந்த பார்வையின் குளுமையை
தாங்க இயலாமல் என் பார்வை
பறி போய் விட போகிறது...
இங்கே அதீதமாக நம் மீது
செலுத்தப்படும் எதுவும்
நஞ்சாகவே முடிந்து விடும் என்று உனக்கு எவரும்
புரிய வைக்கவில்லை போலும்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:04/08/25/
திங்கட்கிழமை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக