ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 25 ஜனவரி, 2025

நான் இந்த பிரபஞ்சத்தின் ஓரத்தில் இளைப்பாறி அமர்ந்து இருக்கிறேன்...

 


பயணிகள் தனது பேருந்து 

வரும் வரை காத்திருக்கும் 

அந்த பயணியர் இருக்கையில் 

யாரும் இல்லாத அந்த நேரத்தில் 

சிறிது இளைப்பாறும் அந்த மரத்தின் 

ஒரு இலையை போல...

நான் இந்த பிரபஞ்சத்தின் 

ஒரு ஓரத்தில் 

இளைப்பாறி அமர்ந்து இருக்கிறேன்...

எனை அழைக்க உரிமையுள்ள 

கால தேவனோ இந்த பிரபஞ்சத்தின் 

எந்த திசையில் எனை தேடி 

அலைகிறாரோ 

நான் அறியேன்...

அவர் வரும் வரை நான் இங்கே 

போவோர் வருவோரை 

ஒரு புன்னகை சிந்தி வேடிக்கை 

பார்த்து களிக்கிறேன் ...

என் புன்னகையில் 

பரவசமடைந்த சிலரோ 

சில இனிப்புகளை திணித்து 

செல்கின்றனர்...

நானோ அதை அவசர கதியில் 

தின்று தீர்க்கிறேன்...

அந்த கால தேவன் 

வந்து கண்டிக்கும் முன்னே...

இங்கே நானும் அந்த கால தேவனின் 

செல்ல பிள்ளை தானே.

#இரவு கவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 25/01/25/சனிக்கிழமை.

இளம் இரவு வேளையில்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...