ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 24 ஜனவரி, 2025

அந்த கண்ணீருக்கு தெரியாது...


அந்த கண்ணீருக்கு தெரியாது...

இவள் அந்த நேரத்தின் 

கடினத்தை கடப்பது என்பது 

ஒரு யுகத்தின் வலியை போல என்று! 

என்றாலும் எனக்கு தற்போதைய 

ஆறுதலாக அது மட்டுமே 

துணையாக 

நான் கேட்காமலேயே 

என் கன்னத்தில் 

ஆழ்ந்த நீண்ட முத்தமிட்டுக்கொண்டே 

என் கவலைக்கு 

ஒரு விடை கொடுத்து பிரிக்க 

முடியாதா என்ற யோசனையோடு 

பேரன்பு கொண்டு 

எனை நனைத்து 

அதை பெரும் நதியாக்க

முயற்சி செய்து அதில் 

என் கவலையை கரைத்து விட 

பெரும் பிரயத்தனங்களை 

செய்து கொண்டு இருக்கிறது.../

நானோ அதன் 

பேரன்பில் அடைக்கலம் அடைந்து 

பெரும் ஆறுதலோடு 

உறங்கி விட்டேன்...

இதோ அந்த பேரன்பு கொண்ட 

கண்ணீரும் என் கண்களுக்குள் 

மறைந்து பெரும் காதலோடு 

என்னுள் கலந்து சங்கமிப்பதை 

அந்த பிரபஞ்சமும் பெரும் மூச்சோடு 

பார்த்து விட்டு மெல்ல நகர்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 24/01/25/வெள்ளிக்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...