ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 9 டிசம்பர், 2023

இன்றைய தலையங்கம்

 


இன்றைய தலையங்கம்:-

ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் இங்கே கடந்து சென்ற புயலால் மக்கள் பெரும் அவதிக்கு காரணம் நேர்மையான அதிகாரிகள் இல்லாமல் போனது தான்... ஒரு சமயோசிதமான அதிகாரி எவ்வளவு மோசமான அரசியல்வாதிகளையும் யோசித்து திருந்த வைக்க முடியும்... இங்கே அதிகாரிகள் தான் மெத்த படித்தவர்கள்.. பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு நிறைய விசயங்கள் தெரியாது..தொலைநோக்கு பார்வையுடன் எல்லா அரசியல்வாதிகளும் இருக்க வாய்ப்பே இல்லை.. ஆனால் ஒரு நல்ல அதிகாரி பொறுமையாக எடுத்து சொல்ல முடியும்.. அப்படி எடுத்து சொல்லியும் கேட்கவில்லை என்றால் அவர்கள் சட்ட ரீதியாக அணுகலாம்... அரசியல்வாதிகள் தான் செலவு செய்த பணத்தை எடுக்கத் தான் பார்ப்பார்கள்.. அப்படி அவர்களை செயல்பட தூண்டியது மக்களாகிய நாம்.. ஒவ்வொரு முறையும் தேர்தல் வந்தால் ஓட்டுக்கு பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று யோசிக்க வேண்டும்.. இப்படி ஒவ்வொரு விசயமும் சங்கிலி தொடர் போல ஏதோவொரு வகையில் நாம் அனைவரும் குற்றவாளிகள்... எப்படியோ ஒரு வீடு வேண்டும்.. அது ஏரியாக இருந்தால் என்ன குளமாக இருந்தால் என்ன என்று யோசிக்காமல் வாங்க எடுக்கும் முடிவு... இந்த இயற்கைக்கு நாம் என்ன செய்து இருக்கிறோமோ அதைத் தான் சரியான நேரத்தில் சரியான முறையில் நமக்கு கொண்டு வந்து சத்தம் இல்லாமல் சேர்த்து விட்டு நாம் படும் அல்லலை பார்த்து கவலை இல்லாமல் அமைதியடைகிறது... நாம் அந்த இயற்கைக்கு அமைதி இல்லாததை தான் கடந்த காலங்களில் கொடுத்து இருக்கிறோம்..அவரை விதைத்து விட்டு துவரை எதிர்பார்த்தால் துவரையா கிடைக்கும்?

இனியேனும் மக்கள் நிம்மதியாக வாழ என்ன தேவை என்று புரிந்துக் கொண்டு வாழ்க்கையில் சில முடிவுகளை எடுக்க வேண்டும்.. விழித்துக் கொள் மானிடனே.. நமது அரசியல்வாதிகள் நம்மை நமது வாழ்வியலை விட்டு வெகுதூரம் இழுத்து சென்று விட்டார்கள்..அதற்கான பலனை தான் நாம் அனுபவிக்கிறோம்..இங்கே ஆழ்ந்த அரசியல் விமர்சகர்கள் மிகவும் குறைவு.. நாம் நமது வாழ்க்கையை எப்படி வடிவமைக்க வேண்டும் என்று நாம் முடிவெடுக்க இறைவன் நமக்கு அதிகாரம் கொடுத்து இருக்கிறார்.இனியேனும் யோசிக்க வேண்டும் மக்கள்!

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் போரின் உக்கிரத்தை தணித்து...

 நீயோ குருட்டு பிடிவாதத்தால் எவரின் தூண்டுதலாலோ விலகி விலகி பயணிக்கிறாய்  என்னிடம் இருந்து... அந்த உக்ரைனை போல... நானோ உன்னை  என் பேரன்பின் ...