ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 27 ஆகஸ்ட், 2022

தேநீர் கோப்பையின் அன்பு


அத்தனை நேரம்

என்ன பேசினார்கள் 

ஏது பேசினார்கள் 

தெரியவில்லை

கூட்டமாக கூடி..

அங்கே பேசப்பட்ட

விசயங்கள் எல்லாம்

நிச்சயமாக

ஏதோவொரு மனிதரை பற்றியோ

இல்லை ஒன்றுக்கும்

பயன்படாத விசயங்களாக தான்

இருக்கும் என்று மட்டும் 

ஊகிக்க முடிந்தது ...

கூட்டம் கலைந்து

அங்கே இருந்து வந்த

ஒருவர் என்னை பார்த்து கேட்கிறார்

நீங்களும் அங்கே வந்து இருக்கலாம்

நன்றாக நேரம் போனது என்றார்

உற்சாகமாக...

நான் சிரித்து கொண்டே சொன்னேன்

இதோ இந்த புத்தகம் தான்

தடுத்தது 

நீ அங்கே சென்று

உங்கள் இன்பத்தை

கெடுத்துக் கொள்ள 

வேண்டாம் என்று..

என்றேன்..

கூடவே இருந்த தேநீர் கோப்பை

கொஞ்சம் என்னை பருகி

எனக்கு விடை கொடுங்கள் என்றது

மிகவும் அன்பாக என்னிடம்..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கிருஷ்ணா இணையதள வானொலி

  வணக்கம் நேயர்களே 🙏. இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம...