ஒரு தேடலில்
எல்லாமும் கிடைத்து விட வேண்டும்
என்று
முனைப்புடன் தேடிக் கொண்டு
இருக்கிறேன்...
ஒன்றுமே என் கைகளுக்கு
தட்டுப்படவில்லை...
சோர்வாக அமரும் தருணத்தில்
அப்போது யதேச்சையாக
அந்த ஒரு நொடிப் பொழுது
உணர்த்துகிறது...
இங்கே எதுவும் உன் கைகளுக்கு
தட்டுப்படாதது
உனது மிக பெரிய வரம் என்று...
ஆம் உண்மை தான்
சமுத்திரத்தின் தேடலை இங்கே யார்
அறியக் கூடும்?
அது நானாக இருந்தால்
எப்படி இருக்கும்?
இந்த கேள்விக்கு எவரும்
பதில் அளிக்க முடியாது என்பதே
எனக்கு மிக பெரிய ஆறுதல்...
அப்படி தான் அந்த தேடலில்
என் கைகளுக்கு எந்த பொருளும்
அகப்படாத தருணமும்...
சுவாரஸ்யம் இங்கே
எதில் தான் இல்லை என்று
என் மனதின் கேள்வியே
ஆறுதல் எனக்கு...
#இரவுகவிதை.
நேரம் 10:07.
நாள் செப்டம்பர் 10
#இளையவேணிகிருஷ்ணா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக