ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

நான் மீண்டு விடுவேன் காலத்தின் துணைக் கொண்டு..


உனக்காக மீட்டிக் கொண்டு

இருக்கிறேன்

ஒரு அபூர்வ இசையை!

அந்த இசையின் ஈர்ப்பில்

இறுதியிலேனும் வந்து 

விடுவாயென...

நீயோ எனது காதலின் 

பெரும் தாகத்தை உணராமல் 

இசை தந்தியை

அறுத்தெறிந்து காதலை

பெரும் தீயில் கொளுத்தி

செல்கிறாய் எந்தவித சலனமும் 

இல்லாமல்...

நான் மீண்டு விடுவேன்

காலத்தின்

துணைக் கொண்டு...

பாவம் இந்த தந்தி இல்லாத 

கருவி தான் நம் காதலின் 

அடையாளத்தை 

மறைக்க தெரியாமல் 

வீழ்ந்து கிடக்கிறது இங்கே

கேட்பாரற்று...

#இரவுகவிதை.

நேரம் இரவு:9:06.

செப்டம்பர் 10.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்றைய தலையங்கம்: யார் குற்றவாளிகள்?

  #இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...