ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 2 அக்டோபர், 2022

நமது ஸனாதான தர்மம் சொல்வது என்ன?


 இரவு சிந்தனை:-

நமது ஸனாதான தர்மத்தை பற்றி தவறான புரிதலோடு தான் இங்கே பலபேர் பயணிக்கிறோம்.. உதாரணமாக தர்ப்பணம் கொடுக்க பிள்ளை இல்லை என்றால் அந்த வம்சத்தின் முன்னோர்கள் நரகத்தில் உழல்வார்கள் என்று சொல்கிறது.. அதேவேளையில் அந்த வம்சத்தில் சகோதரர்களோடு பிறந்த ஒருவருக்கு குழந்தை இருந்தால் அது மற்ற உடன்பிறப்புகளுக்கும் வாரிசு தான்.. அதனால் பிள்ளை பேறு அண்ணன் தம்பி எவருக்கேனும் ஒருவருக்கு குழந்தை இருந்து மற்றவருக்கு பிள்ளை பேறு இல்லை என்றால் அவர்களை தூற்றுபவர்களை பாவம் வந்து சேரும் என்று சொல்கிறது...இதை எத்தனை பேர் நம்முள் புரிந்து கொண்டு இருக்கிறோம் என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்று தான் சொல்வோம்..இது கருட புராணத்தில் உள்ளது.. இந்த விளக்கம்..சரி இதை விட்டு விட்டு அடுத்த விசயத்திற்கு வருவோம்..

ஒரு குழந்தை பிறந்த பிறகு அந்த குழந்தையின் தலையில் கை வைத்து பெற்ற அந்த தாய் இனி எந்த கருவறையிலும் புகாதாவாறு ஆசீர்வாதம் செய்து அழ வேண்டும் என்று நமது ஸனாதான தர்மம் சொல்கிறது.. ஆனால் நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்..இதை எத்தனை பேர் கடைபிடிக்கிறோம்.. இந்த உலகில் மிகவும் உயர்ந்த தத்துவத்தை நமது ஸனாதான தர்மத்தை தவிர வேறு எந்த எதுவும் சொல்லவில்லை.

இங்கே ஒரு விசயத்தை கவனியுங்கள்.. ஒரு பக்கம் ஒரு குடும்பத்தில் சந்ததி இல்லை என்றால் நரகம் என்று சொன்ன நமது ஸனாதான தர்மம் மறுபக்கம் ஒரு குழந்தை பிறந்தவுடன் அந்த ஆன்மா எந்த கருவறையிலும் புகாதவாறு தாய் ஆசீர்வாதம் செய்ய சொல்கிறது.. ஏன் அப்படி சொல்கிறது.. ஒரு தாயின் ஆசீர்வாதம் பலித்து அவன் பிறவி சூழல் இதில் இருந்தாவது முக்தி பெறாதா என்று தான்.. இப்படி ஆழ்ந்த தத்துவம் உள்ள ஸனாதான தர்மத்தை நன்றாக புரிந்து கொண்டு விமர்சனம் செய்யுங்கள்.. வாய்க்கு வந்த படி எவரேனும் பேசினால் நீங்களும் தரம் தாழ்ந்து சண்டைக்கு போகாமல் அதற்கான விளக்கத்தை கொடுக்க முயற்சி செய்யுங்கள்...

#நம் #தர்மம்

#நம் #வாழ்வியல் 

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விடை தெரியா கேள்வி ஒன்று...

  விடை தெரியா கேள்வி ஒன்று  பல யுகங்களாக இங்கும் அங்கும்  அலைந்து திரிந்து கொண்டு  இருக்கிறது என்னுள்ளே... ஒவ்வொரு முறையும் இந்த பூமியில்  ந...