ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 19 நவம்பர், 2024

பெரும்பாலான மக்கள் ஒளிந்துக் கொள்ளும் வார்த்தையான...


பல ஆயிரம் ஆயிரம் வேடிக்கைகளில்

இதுவும் ஒன்று...

வெளியே காட்டப்படும் பிம்மத்தில் 

மறைந்து இருக்கும் சூட்சுமத்தை 

இங்கே யார் அறியக் கூடும்?

அந்த பிம்பத்தின் நேர்த்தியில்

ஆயிரம் ஆயிரம் கொண்டாட்டங்கள் 

வடிவமைக்கப்படுவதை 

வேடிக்கை பார்த்து நான் 

சிரித்துக் கொள்வதை

பார்த்து காலம் 

என்ன புன்னகை என்று 

என்னிடம் கேள்வி எழுப்பும் போது

வழக்கம் போல 

பெரும்பாலான மக்கள் 

ஒளிந்துக் கொள்ளும் 

வார்த்தையான ஒன்றுமில்லையில்

நானும் ஒளிந்துக் கொள்கிறேன் 

தவிர்க்க முடியாமல்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 20/11/24/புதன்கிழமை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

போர் நிறுத்தம்...

   இத்தனை நாள் தூரமாக நின்று  வேடிக்கை பார்த்த  அமைதி  இன்று எந்த தயக்கமும்  இல்லாமல் என் கைகளில்  வேகமாக ஓடி வந்து  பேரன்பு கொண்டு  என்னை ...