ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 19 நவம்பர், 2024

அந்த பிடிமானமற்ற தனிமையில்...


அந்த பிடிமானமற்ற 

தனிமையில் தான் 

ஆயிரம் ஆயிரம் 

ஆழ்ந்த தேடலின் சுவடுகள் எனை 

கொஞ்சம் நிதானமாக 

கடந்து கடந்து போகிறது...

நானும் நிதானமாக அது 

கற்றுக் கொடுக்கும் 

ஆழ்ந்த கல்வியை 

கற்றுக் கொண்டு 

இருக்கும் போதே 

என் கவனத்தை திசை திருப்பி 

வழி எங்கும் 

லௌகீக விதைகளை தூவி 

செல்வதை நீங்கள் 

நிறுத்தி விடுங்கள்...

ஏனெனில் நான் அதிலிருந்து 

பல கோடி மைல்கள் கடந்து 

வந்து விட்டேன்...

நீங்கள் எனை துரத்தி துரத்தி 

சோர்ந்து விடாதீர்கள்...

ஏனெனில் வழி எங்கும் 

உங்கள் சோர்வை தணிக்க 

பானம் ஏதும் அங்கே கிடைக்க போவதில்லை என்பதை 

நீங்கள் கவனம் வையுங்கள்...

#இளையவேணிகிருஷ்ணா

நாள் 20/11/24/புதன்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்க்கை ஒரு சமன்பாடு தான் -சூபிஞானி கதை 🎉🦋

  வணக்கம் நேயர்களே 🎻🙏  இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...