தேடல் இல்லாத வாழ்க்கை
வறண்ட பாலை போன்றது
என்று அங்கே யாரோ ஒரு வாழ்க்கை
பயணி தன் உடன் பயணிப்பவரிடம்
சொல்லி செல்கிறார்...
நானோ அந்த வார்த்தைகளை
கேட்டு விட்டு
கொஞ்சம் புன்முறுவலோடு
பயணிக்கிறேன்...
இங்கே தேடலின் வெறுமையில்
சிக்கிக் கொள்வதை விட
இதோ கடந்து செல்லும் இந்த
நொடிக்கு இரையாகி போவதே மேல்
என்று
மனதில் நினைத்துக் கொண்டு
நடக்கிறேன்...
ஏனோ என் கால்கள் வேகமாக
நடக்க ஒத்துழைக்க மறுக்கிறது...
கொஞ்சம் வெறுப்போடு
அண்ணாந்து பார்த்தால்
அங்கே என்னை பார்த்து
சிரித்து வைத்து அந்த மேகத்தின்
நிழலில் மறைந்துக் கொள்கிறது
அந்த நிலவு...
நான் பயணிக்கும் இந்த சாலை
எனக்கு ஆயிரம் ஆயிரம்
புத்தத்துவத்தை உணர்த்தி விட
துடிக்கும் போதும் நான்
அந்த உணர்வை கடந்தும்
வாழ பயணிக்கிறேன் இங்கே...
வாழ்வின் ரகசியத்தை தெரிந்து கொண்டு என்ன செய்ய போகிறோம்
இங்கே
என்று கொஞ்சம் வெறுமையாக
உணர்ந்து...
வாழ்க்கை என்னை பொறுத்தவரை
ஒரு புயலில் சிக்கிய ஓடம்...
என்றோவொரு நாள் அது கரையை
கடக்கும்...
இல்லை கடலில் மூழ்கும்...
அவ்வளவு தானே..
வேறென்ன இங்கே புதிதாக
நடந்து விட போகிறது??
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 27/11/24/புதன்கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக