ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 22 ஜூலை, 2024

இரவு கவிதை 🍁


அந்த பட்டமரத்தின் கவலைகளை 

இங்கே யார் அறியக் கூடும் 

கொடிய விஷத்தை கக்கி 

உயிரோட்டம் நிரம்பிய 

இந்த பிரபஞ்சத்தை 

கொஞ்சம் கொஞ்சமாக 

உயிர் இழக்க செய்யும் 

மனிதர்களிடையே

அதை கவனிக்க எவரும் இல்லாமல் 

காற்றில் அசைந்தாடி நடனம் ஆடி 

அந்த முழு நிலவின் ஈர்ப்பை பெற்று விட 

அந்த மரம் போராடுவதை பார்த்து 

நிலவும் இரக்கம் கொண்டு 

தனது கிரணங்களால் பெரும் காதல் கொண்டு 

அணைத்துக் கொள்ளும் போது 

உயிர் பிழைத்து ஆனந்தம் 

கொள்கிறது...

இங்கே உயிரோட்டத்தின் மகத்துவம் 

பெரும் காதலில் உள்ளது என்று 

அந்த மூட மனிதர்கள் 

அறியமாட்டார்கள் என்று 

இந்த பிரபஞ்சம் ரகசியமாக 

பேசிக் கொள்கிறது...

#இரவு கவிதை 🍁.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 22/07/24/திங்கட்கிழமை.

முன்னிரவு 8:54.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த வெறுமையோடு கூடிய பயணத்தில் ஒரு துணையாக...

அந்த வெறுமையோடு கூடிய  பயணத்தை  நான் பயணித்துக் கொண்டு  இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு  சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...