#இன்றைய #தலையங்கம்:- இளைஞர்களை நல்வழியில் கொண்டு செல்லும் களத்தில் பொதுமக்கள்:-
மக்களாகிய நாங்கள் கேட்டு கொள்வதெல்லாம் இளைஞர்களை மோசமான போதை சீரழிவில் இருந்து காப்பாற்றுவது தான்...
தமிழகத்தின் தற்போதைய தேவை அது மட்டுமே...
தமிழக மக்கள் தற்போது இது பற்றிய சிந்தனையோடு தான் இருக்கிறார்கள் மதிப்பிற்குரிய #முதல்வர் அவர்களே...
ஒட்டுமொத்த இளைஞர்கள் சீரழிந்து விட்ட பிறகு இங்கே எந்த உரிமையை நீங்கள் மீட்க போராடுகிறீர்கள் என்பதை நாங்கள் தெரிந்துக் கொள்ள விரும்புகிறோம்...
தமிழ் நாட்டின் பராம்பரியம் கலாச்சாரம் எல்லாமே போய் விட்டது..
தற்போது அதை மீட்டெடுக்க போராடுங்கள்...
ஒரு நல்லாட்சி என்பது அனைத்தையும் (அதாவது மக்களின் நலன்களை) உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்...
வெற்று கூச்சல் கேட்டு கேட்டு நாங்கள் சலித்து விட்டோம் என்று சொல்வதை விட சோர்ந்து விட்டோம்...
நீங்கள் கல்விக்காக ஆசிரியர் ஊதியத்திற்காக மக்கள் வரிப்பணத்தை செலவு செய்வதெல்லாம் விழலுக்கு இறைத்த நீராக போகிறதே இன்றைய மாணவர்கள் போதை கலாச்சாரத்தால்...
அதனால் எது எதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
எதுஎதை மிகவும் அமைதியாக அதே சமயத்தில் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்ற தெளிவு வேண்டும்...
வெறும் வார்த்தை ஜாலங்கள் தேவையில்லை...
திருத்தணியில் நடந்த சம்பவம் உங்கள் உடன்பிறப்புகளுக்கே நிச்சயமாக மோசமான அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பது தான் உண்மை..
தேவை தற்போது அரசாங்கத்திற்கு சுய பரிசோதனை...
இந்த ஆண்டின் இறுதி பகுதியில் இப்படியொரு சம்பவம் நடந்து உங்களுக்கு கரும் புள்ளியை திடீரென வாங்கி கொடுத்து இருக்கிறது என்று நினைக்காதீர்கள்...
இது போதை வஸ்துக்கள் நெடுங்காலமாக சமூகத்தில் புரையோடியதன் விளைவுகள் தான் இப்படி பெரும் பூதமாக கிளம்பி இருக்கிறது...
இதற்கு முழு முதற் காரணம் போதை வஸ்துக்கள் மாநிலத்தில் எங்கேயும் உலவாமல் இருக்க தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டிய அரசாங்கம் அதை செய்யாமல் விட்டது தானே காரணம்...
தமிழ் நாட்டில் #இரவு #எட்டு மணிக்கு பிறகு பொதுமக்கள் சாலையில் போகவே அஞ்சுகிறார்கள்... அதுவும் #கிராமம் உட்பட..இது பற்றி நான் முன்பே ஒரு தலையங்கம் எழுதி இருக்கிறேன்...
இது பற்றி இனியேனும் அரசாங்கம் ஒரு நல்ல முடிவை எடுக்கட்டும்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:31/12/25.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக