ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 30 டிசம்பர், 2025

இன்றைய தலையங்கம்:சமுதாயத்தை கட்டமைப்பது யார் பொறுப்பு?


#இன்றையதலையங்கம் :-

#சமுதாயத்தை #கட்டமைப்பது #யார்?மிகவும் அருவருக்கத்தக்க சமுதாயத்தை உருவாக்குவதில் எப்போதும் நமது பங்கு உண்டு என்பதை மறவாதீர்கள்... கல்வி என்பதற்கு முன்னால் சுய ஒழுக்கம் முக்கியம் என்பதை மறந்து நெடுநாட்களாகிவிட்டது என்பதற்கு அடையாளமாக தான் திருத்தணி சம்பவம்...

கேரளா சினிமா பாருங்கள்... நமது சினிமாவையும் பாருங்கள்...

சமுதாய நிகழ்வை பெரும்பாலும் வெட்டு குத்து என்று வளர்த்தெடுத்த சினிமாவை கொஞ்சம் கூட கத்தரிக்காமல் அங்கீகாரம் கொடுத்தது யார் என்று யோசித்து பாருங்கள்..

இளைஞர்கள் முதலில் ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்று எத்தனை சதவீத பெற்றோர்களுக்கு அக்கறை இருக்கிறது? எல்லாவற்றையும் பணத்தால் மதிப்பிட நாம் தான் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கிறோம்...

முதலில் ஒழுக்கத்தை கற்றுக் கொடுங்கள் என்று பெற்றோர்கள் பள்ளிகளில் போய் சொல்லி இருக்கிறார்களா?

இல்லை அவர்கள் தான் தமது பிள்ளைகளை கண்டித்து இருக்கிறார்களா..

இங்கே மிகவும் தரம் தாழ்ந்த சமுதாயத்தை கட்டமைத்து விட்டு அரசியல்வாதிகளையும் அனுமதித்து விட்டு மீண்டும் நாம் அதே சமுதாயத்தையும் நாமே பணத்தை வாங்கிக் கொண்டு கொஞ்சமும் பொறுப்பில்லாமல் அரசியல்வாதிகளையும் தேர்ந்தெடுத்து விட்டு அதை பார்த்து நாமே குறை கூறுவது நமது முகத்தில் நாமே உமிழ்ந்து கொண்டதற்கு நிகரானது...

இனியேனும் இளைய தலைமுறையினரை நாம் மோசமான பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க பெரும் பிரயத்தனங்கள் செய்வோம்...

அனைவரும் கூடி இளைய சமுதாயத்தை ஒழுக்க நெறியில் மீட்டெடுக்க நமது வீட்டில் இருந்து தொடங்குவோம்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:30/12/25.

#இன்றையதலையங்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கழுதையும் நானும்...

 #கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...