அந்த வழிப்போக்கனின்
அத்தனை கனவுகளையும்
மௌனமாக குறித்துக் கொள்கிறது
அந்த நெடுஞ்சாலை...
அவன் கனவுகளில் ஒன்றிரண்டு
ஏதேனும் சிதறி விழுவதை
எவர் கால்களும் படாமல்
காத்து கரை சேர்க்கிறது
ஒரு ஓரமாக அந்த காலம் ...
இங்கே பழுதடைந்த கனவுகளை
தன் போக்கில் ஓடும் அந்த நதியில்
கரைத்து விட்டு சலனமற்று
பயணிக்கிறான்
அந்த வழிப்போக்கன் ...
இங்கே அவன் போகும் சாலையோ
பெரும் துயரத்தோடு அவனது
கனவுகளை சுமந்த கால்களை
வருடிக் கொடுத்து மௌனமாக
தேம்பி அழுகிறது...
இங்கே எதையும் கண்டுக் கொள்ள
மனமில்லாமல் அவன் போகிறான்
நெடுந்தூர பயணமாக...
எங்கே என்று மட்டும்
அந்த வழிபோக்கனிடம் மட்டும் அல்ல
அந்த சாலையிடம் கூட
கேட்டு வைக்காதீர்கள்...
ஏனெனில்
உறவுகளில் சில அபூர்வமானது..
அதில் அந்த நெடுஞ்சாலையும்
அந்த வழிப்போக்கனின் உறவும்
அதீத அபூர்வமானது...
இந்த பிரபஞ்சத்தில் உள்ள
இலட்சோப இலட்சம் கோடி
மனிதர்களின் உறவுகளையும் விட
இவர்கள் உறவு மகா உத்தமமானது...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 25/02/25/செவ்வாய் கிழமை.
நடுநிசி நெருங்கிய வேளையில்...