ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 3 பிப்ரவரி, 2025

என் மீது பெரும் காதலோடு...


நான் அப்படி தான் என்று 

சொன்னால் 

நீ அப்படியா என்கிறார்கள்...

நான் அப்படி எல்லாம் இல்லை 

என்று சொன்னால் 

நீ அப்படி தான் என்று 

பிடிவாதமாக என்னிடம் 

பலமணி நேரங்கள் 

சண்டை இடுகிறார்கள்...

இவர்கள் என்னிடம் 

இப்படி நேரத்தை 

திருடிக் கொண்டு இருக்க 

நான் எழுத எடுத்த வைத்த 

காகிதம் என்னிடம் 

முறைத்து கோபமாக 

பறந்து போகிறது...

நான் என்ன செய்ய இயலும் 

என்று அப்படியே அமர்ந்து கொண்டு 

இருக்கும் போது 

எங்கிருந்தோ வந்த 

தேநீரின் வாசனை மட்டுமே 

என்னை பெரும் காதலோடு 

அங்கே யாரிடமோ சொல்லி 

அனுப்புகிறது 

என்னை அந்த பெரும் காதலின் 

உணர்வு மாறாமல் 

வரச் சொல்லி வழி மேல் 

விழி வைத்து 

காத்திருக்கிறது...

நான் அந்த அழைப்பை ஏற்று 

திடீரென வந்த பெரும் மழையில் 

நனைந்து செல்கிறேன்...

அந்த பெரும் காதலின் உணர்வை 

என் இதயத்தில் தேக்கி வைத்து...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 03/02/25/திங்கட்கிழமை.

அந்தி மயங்கும் வேளையில்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்க்கை ஒரு சமன்பாடு தான் -சூபிஞானி கதை 🎉🦋

  வணக்கம் நேயர்களே 🎻🙏  இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...