ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025

மாயையின் சுவாசத்தின் வீரியத்தை...


அந்த எத்தனையோ 

மாபெரும் சாதனையாளரின் உடலும் 

புகழ் மனிதனின் உடலும் 

தோற்றுக் கொண்டு தான் 

இருக்கிறது... 

அந்த மயானத்தில் எரியும் தணலில்!

இங்கே அந்த தணலோ 

எந்த மனிதனின் சாதனையையோ 

புகழையோ 

உரிமைக் கொண்டாடாமல் 

எந்தவித அகங்காரமும் இல்லாமல் 

அமைதியாக தின்று தீர்க்கிறது 

அந்த உடல் எனும் ரதத்தை...

இங்கே மாயையின் 

சுவாசத்தின் வீரியத்தை 

யாரும் கொல்ல இயலாமல் 

இங்கும் அங்கும் அலைந்து 

திரிகிறது...

நானோ இதை எல்லாம் 

வேடிக்கை பார்த்து 

பொழுதை போக்கும் 

சாதாரண மனுஷியாகின்றேன்!

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்23/02/25.

அந்தி மாலைப் பொழுதில்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த வெறுமையோடு கூடிய பயணத்தில் ஒரு துணையாக...

அந்த வெறுமையோடு கூடிய  பயணத்தை  நான் பயணித்துக் கொண்டு  இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு  சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...