ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 4 டிசம்பர், 2024

அடுத்த திகில் நிமிடங்கள் இன்னும் கொஞ்ச தூரம் இருக்கிறது...


அந்த சாபத்தின் செந்தீ 

கடும் இருளில் துழாவி துழாவி 

என்னை பதம் பார்க்க வந்தது...

நானோ ஏதோ நினைவின் வழியே 

கொஞ்சம் சிந்திய கண்ணீரில்

அந்த செந்தீயின் மொத்த தகிப்பும் 

உள்ளடங்கி குளிர்ச்சியும் இல்லாமல் 

வெப்பமும் இல்லாமல் 

கிடந்த சாம்பலினை 

என் மேனி மீது பூசிக்கொண்டு 

அந்த திக்கற்ற நிர்க்கதியான 

பறவை போல இங்கும் அங்கும் 

அலைந்து திரிவதை பார்த்து 

அந்த இருளும் 

மேலும் கருமையை பூசி

கொஞ்சம் நடுநடுங்கி தான் 

அந்த மொத்த இரவையும் 

கண் துயிலாமல் 

பிரமை பிடித்தது போல 

கழித்தது...

நானோ அந்த கருக்கலில் 

என் மேனி எங்கும் பூசிய சாம்பலை 

உதிர்த்து விட்டு 

இந்த பிரபஞ்சம் அதிரும் வகையில் 

சிரித்து வைத்தேன்...

அதை பார்த்த அந்த பகல் பொழுதும் 

திக்கு தெரியாமல் 

சிதறி போனது கண்டு 

இந்த மனிதர்கள் 

கண் விழித்து பார்த்து மிரண்டு தான் 

போனார்கள்...

இரவோ 

அந்த நொடிப்பொழுதில் தான் 

கொஞ்சம் இறுக்கம் தளர்த்தி

நிம்மதி பெருமூச்சோடு

கண் அயர்ந்தது...

அடுத்த திகில் நிமிடங்கள் இன்னும் 

கொஞ்சம் தூரம் இருக்கிறது 

என்கின்ற தற்காலிக அமைதி 

கொண்ட மனதோடு...

இளைய வேணி கிருஷ்ணா.

நாள்:05/12/24/வியாழக்கிழமை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த பிணந்திண்ணி கழுகின் பசி...

அந்த பிணந்திண்ணி கழுகு  பசியாற எவ்வளவு தூரம் பயணித்தும் பயனில்லை அன்று... அன்று அதன் விதி அதுதானா என்று  சோர்ந்து அந்த மரக்கிளையில்  அமர்ந்த...