ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 25 டிசம்பர், 2024

உயிரோட்டமான அந்த காதல் அப்படி ஒன்றும் வீணாகி விடவில்லை...


இதோ அந்த உன்னோடான

ஊடலுக்கும் தேடலுக்குமிடையில் தான் நான் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறேன்....

எனினும் இந்த தேநீரின் பெரும் காதலோடு கூடிய இதழ் ஸ்பரிசத்தில் தான் 

தினமும் உன்னோடான காதல் நினைவுகளை கொஞ்சம் மறந்து 

ஏதோவொரு பித்து நிலையில் இருந்து தப்பித்து ஜீவித்து இருக்கிறேன்...

நீ என்னோடு சேராத காலமும் இடைவெளியும் 

அப்படி ஒன்றும் வீணாகி விடவில்லை தான்...

இதோ என் கையில் பெரும் நறுமணத்தோடு என் இதழில் பதிக்கும் முத்தத்தின் தேநீர் சுவையோடு இன்றைய காலத்திற்குரிய கடமைகளை செய்ய ஓடோடி போக எத்தனித்து விட்டேன்...

என் நிலைமையை அறிந்த தேநீரும் மாலையில் நாம் சந்திப்போம் என்று 

என்னை பெரும் ஏக்க பார்வை பார்த்து பிரியா விடை கொடுத்து அனுப்பி வைத்தது...

இங்கே எந்த உயிரோட்டமான காதலும் அப்படி ஒன்றும் தோற்று விடவில்லை தனக்கு தானே ஆற்றுப்படுத்திக் கொண்டு 

அந்த சாலையில் ஓடும் மக்களோடு நானும் ஒரு புள்ளியாக மறைகிறேன்...

மீண்டும் சந்திப்போம் மாலையில் என்று அந்த தேநீர் கோப்பைக்கு மீண்டும் ஒரு இதழ் முத்தம் பதித்து...

இளைய வேணி கிருஷ்ணா.

நாள் 26/12/24.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த பிணந்திண்ணி கழுகின் பசி...

அந்த பிணந்திண்ணி கழுகு  பசியாற எவ்வளவு தூரம் பயணித்தும் பயனில்லை அன்று... அன்று அதன் விதி அதுதானா என்று  சோர்ந்து அந்த மரக்கிளையில்  அமர்ந்த...