எனது வாழ்க்கை பயணத்தின்
கேட்க அங்கே
ஆயிரம் ஆயிரம் காதுகள்
தன்னால் முடிந்தவரை
கூர் தீட்டி வைத்து காத்திருக்கிறது...
நானோ அந்த ரகசியத்தை
கொஞ்சமும் வெளியே
வந்து விடாதபடி
ஆழ்மனமெனும் அறையில்
திணித்து
ஒரு பெரும் பூட்டு போட்டு விட்டு
அந்த சனநெருக்கடியான சாலையில்
நடக்கிறேன்
என் இயல்பு மாறாமல்...
இங்கே என் வாழ்வின் பயணத்தின்
ரகசியமோ அந்த அறையில் இருந்து
உருகி வழிந்தோடி பெரும் ஆறாக
பயணிக்கிறது....
இப்போது அது அங்கே நதியில்
இளைப்பாற நினைக்கும்
அந்த பல இலட்சம் கால்களுக்கு
கொஞ்சம் இதம் அளித்து
பயணிக்குமாறு அதற்கு
கட்டளை இடுகிறேன்...
அதுவும் என் சாயலை ஏந்தி
பயணிக்கும் நுட்பமான ஜீவனாக
அந்த பெரும் மலைகளின்
சிறு பாதை வழியே
பயணிக்கும்போது நானும் ஏனோ
அந்த நதியின் பயணத்தில்
என் கால்களை வைத்த நொடியில்
என் கண்களில் இருந்து
சில சொட்டு கண்ணீர்
அந்த நதியை வெப்பமாக்கி
தாக்கியதில் அது கொஞ்சம்
நிலைதடுமாறி ஆர்ப்பரித்து
பின்பு நிலைத்து ...
என்னை நிலையை
புரிந்துக் கொண்டு
எனை வாரி அணைத்துக் கொண்டு
நிசப்தமாக பயணிக்கிறது...
நானோ அந்த நதியில் எந்தவித
பெரும் சக்தியும் இல்லாமல்
மிதந்து செல்கிறேன்...
இந்த நிகழ்வை ஆச்சரியமாக
வேடிக்கை பார்த்த மக்களுக்கு
தெரியாது...
நான் அனுபவித்த
பெரும் துன்பத்தின்
ஆகர்ஷண சக்தி தான்
இந்த நதியின் பயணமும்
அதில் நான் மிதந்து செல்லும்
நிகழ்வும் என்று...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 06/12/24/வெள்ளிக்கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக