அதோ எந்த தேடலும்
இல்லாமல் ஒரு மனுஷி அங்கே
அந்த சாலையில் பயணிக்கிறாள்
என்று பலரும் கூடி
பேசிக் கொள்வதை கேட்டும்
எந்த சலனமும் இல்லாமல்
கடந்து செல்கிறேன்...
அங்கே என்னை நிந்தித்து
கேலி செய்தவர்களோடு
பெரும் சண்டையிட்டுக் கொண்டு
இருக்கிறது என் ஆயிரம் தேடலின்
சாம்பலின் வெப்பத்தின் தகிப்பின்
உக்கிரத்தின் தீண்டலின்
மகிமை குறையாமல் அந்த காலம்...
நான் அதையும் வேடிக்கை
பார்த்துக் கொண்டே
பயணிக்கிறேன்...
இங்கே இந்த சுவையின்
அபூர்வ தன்மையையும்
எந்தவித சலனமும் இல்லாமல்
நிதானமாக ருசித்துக் கொண்டே...
இந்த நிலையில் எங்கிருந்தோ வந்த
அந்த தென்றலின் தீண்டலில்
அந்த காலம் தனது உக்கிரத்தை
தணித்து
என்னை தேடி ஓடோடி வந்தது...
நான் நின்று அதனை
என் மார்போடு பெரும் காதலோடு
அணைத்துக் கொண்டபோது
என் தோளில் அதன் சில துளி
உதிர்த்த கண்ணீரின் வெப்பத்தில்
அதன் பெரும் காதலை
உணர்ந்தேன்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 25/12/24.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக