ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 31 டிசம்பர், 2024

இன்று போல தான் நாளையும் இருப்பேன்...


இன்று போல தான் 

நாளையும் இருப்பேன்...

யுகம் யுகமாக 

உற்சாகமாக பயணிக்கும் எனக்கு 

இந்த சிறு துளி 

காலத்தின் வரையறைகள் 

எதுவும் செய்ய போவதில்லை..

நான் நானாக பயணிக்கும் வரை...

ஒரு நதியின் பேரமைதியை போல 

சலனமற்று தொடரும் 

என் பயணத்தில் எந்த கால தேசமும் 

எல்லை இல்லை...

நான் நானாக எப்போதும்...

#இரவு கவிதை🎻 

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:31/12/24/செவ்வாய் கிழமை 

வாழ்க்கை அற்புதமானது...

 


வாழ்க்கை அற்புதமானது!

இயற்கையின் பேரன்பில் 

நாம் அனைவரும் அரவணைத்து 

கிடக்கிறோம் என்று நம்புங்கள்!

அப்போது தான் வாழ்வின் அமிர்தம் 

உங்களுக்கு புரியும்!

மீண்டும் சொல்கிறேன் 

வாழ்க்கை அற்புதமானது!

நம்புங்கள் இங்கே எதுவும் 

நம்மிடம் இருந்து 

களவு போகவில்லை!

வாழ்வின் தேஜஸை 

உணரும் போது 

ஜகத்தின் பேருண்மை 

உங்களுக்கு புரியும்!

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 31/12/24.

நேரம்: இரவின் 

மெல்லிய கைகளில் 

அடைக்கலமான போது..

திங்கள், 30 டிசம்பர், 2024

இருப்பை பற்றி கவலை இல்லாமல் பயணிக்கிறது காலம்...


இருப்பைப் பற்றி

கவலை இல்லாமல்

பயணிக்கிறது காலம்...

நாம் நமது இருப்பை

நிலைநிறுத்திக் கொள்ள

போராடுகிறோம்

காலத்தோடு..

காலம் புகழ் பெறுகிறது..

நாமோ இருப்பை பற்றிய

கவலையில் கதறி அழுகிறோம்...

#இளையவேணிகிருஷ்ணா.

சனி, 28 டிசம்பர், 2024

வருடங்கள் எங்கே என்று கண்டுபிடித்து என்னிடம் ஒப்படையுங்கள்...


பொழுது புலர்வதும் 

மறைவதும் இங்கே சத்தம் இல்லாமல் 

நடந்துக் கொண்டே தான் 

இருக்கிறது...

நானும் பத்தோடு பதினொன்றாக 

இல்லாமல் கூடுதல் ரசனையோடு 

இந்த இயற்கையின் 

அதீத காதலை ரசித்து 

எனது கருவியில் படம் 

பிடித்துக் கொண்டே

நகர்ந்து கொண்டே இருக்கிறேன்...

காலமோ என் பின்னே நீ இப்படி 

இலக்கின்றி அலைவது 

சரியல்ல என்று 

கூவிக் கொண்டு 

என் பின்னால் ஓடி வருவதை ரசித்து 

அதையும் என் கருவியில் அடக்கி 

உற்சாகமாக நடக்கிறேன் 

அந்த அடர்ந்த காட்டுவெளியில்...

இது தான் என் வாழ்வின் 

முடிவில்லா பயணம் ...

இங்கே எனது வாழ்வின் கணக்கில் 

வருடங்கள் எங்கே என்று 

எனக்கு தெரியவில்லை... 

நீங்கள் தெரிந்தால் கண்டுபிடித்து 

என்னிடம் ஒப்படைத்துச் செல்லுங்கள் 🦋🤷

என்று கொஞ்சம் சத்தம் போட்டு 

அறிவித்து விட்டு

இந்த பிரபஞ்சத்தில் மெதுவாக 

மிதக்கிறேன்...

காலமும் என்னை பார்த்து 

பெருமிதம் கொள்கிறது...

இவ்வளவு ரசனையா என்று...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் :29/12/24.

வியாழன், 26 டிசம்பர், 2024

அந்த ஒற்றை சொல்லை விட்டு இருந்தால்...


ஒன்றும் இல்லை என்று 

ஒரே சொல்லை சொல்லி சொல்லி 

ஆயிரம் யுகங்களை 

கடந்து விட்டேன்...

அந்த ஒரு சொல்லை 

நான் மறந்து இருந்தால் 

இன்று நான் ஒரு அபூர்வ உலகத்தை 

சிருஷ்டித்து இருந்திருக்கக் கூடும்...

அங்கே எந்தவித கல்மிஷமும் 

இல்லாத 

மனிதர்கள் இருந்திருக்கக்கூடும் 

என்றேன் 

அந்த காலத்திடம்...

காலமோ அதை விட இது தான் உனது 

ஆழ்ந்த துக்கத்தின் கீறல்களாக 

 உனது மனவலிமையின் 

தகர்க்க முடியாத 

இரும்பு கலசத்தின் உறுதியை

நான் பல யுகமாக உணர்ந்து வருகிறேன்...

இதோ பார் உனது துக்கத்தின் 

கீறல்கள் ...

எனக்கு ஏற்படுத்திய வலியின் 

இரத்த கசிவு 

இன்னும் நிற்காமல் 

என் உடல் எங்கும் 

பயணிக்கிறது என்று என்னிடம் 

அதன் உடலை காட்டிய போது 

நான் விம்மி விம்மி அழுது 

அந்த காலத்தின் தோளில் 

சாய்கிறேன்...

அந்த காலமோ என்னை மிருதுவாக 

அதன் இரு கைகளால் அணைத்து 

பெரும் காதலோடு 

மௌன மொழியில் 

ஆறுதல் சொன்னது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 26/12/24.

புதன், 25 டிசம்பர், 2024

உயிரோட்டமான அந்த காதல் அப்படி ஒன்றும் வீணாகி விடவில்லை...


இதோ அந்த உன்னோடான

ஊடலுக்கும் தேடலுக்குமிடையில் தான் நான் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறேன்....

எனினும் இந்த தேநீரின் பெரும் காதலோடு கூடிய இதழ் ஸ்பரிசத்தில் தான் 

தினமும் உன்னோடான காதல் நினைவுகளை கொஞ்சம் மறந்து 

ஏதோவொரு பித்து நிலையில் இருந்து தப்பித்து ஜீவித்து இருக்கிறேன்...

நீ என்னோடு சேராத காலமும் இடைவெளியும் 

அப்படி ஒன்றும் வீணாகி விடவில்லை தான்...

இதோ என் கையில் பெரும் நறுமணத்தோடு என் இதழில் பதிக்கும் முத்தத்தின் தேநீர் சுவையோடு இன்றைய காலத்திற்குரிய கடமைகளை செய்ய ஓடோடி போக எத்தனித்து விட்டேன்...

என் நிலைமையை அறிந்த தேநீரும் மாலையில் நாம் சந்திப்போம் என்று 

என்னை பெரும் ஏக்க பார்வை பார்த்து பிரியா விடை கொடுத்து அனுப்பி வைத்தது...

இங்கே எந்த உயிரோட்டமான காதலும் அப்படி ஒன்றும் தோற்று விடவில்லை தனக்கு தானே ஆற்றுப்படுத்திக் கொண்டு 

அந்த சாலையில் ஓடும் மக்களோடு நானும் ஒரு புள்ளியாக மறைகிறேன்...

மீண்டும் சந்திப்போம் மாலையில் என்று அந்த தேநீர் கோப்பைக்கு மீண்டும் ஒரு இதழ் முத்தம் பதித்து...

இளைய வேணி கிருஷ்ணா.

நாள் 26/12/24.

என் ஆயிரம் தேடலின் சாம்பலில் வெப்பத்தில்...

 


அதோ எந்த தேடலும் 

இல்லாமல் ஒரு மனுஷி அங்கே 

அந்த சாலையில் பயணிக்கிறாள் 

என்று பலரும் கூடி 

பேசிக் கொள்வதை கேட்டும் 

எந்த சலனமும் இல்லாமல் 

கடந்து செல்கிறேன்...

அங்கே என்னை நிந்தித்து 

கேலி செய்தவர்களோடு 

பெரும் சண்டையிட்டுக் கொண்டு 

இருக்கிறது என் ஆயிரம் தேடலின் 

சாம்பலின் வெப்பத்தின் தகிப்பின் 

உக்கிரத்தின் தீண்டலின்

மகிமை குறையாமல் அந்த காலம்...

நான் அதையும் வேடிக்கை 

பார்த்துக் கொண்டே 

பயணிக்கிறேன்...

இங்கே இந்த சுவையின் 

அபூர்வ தன்மையையும் 

எந்தவித சலனமும் இல்லாமல் 

நிதானமாக ருசித்துக் கொண்டே...

இந்த நிலையில் எங்கிருந்தோ வந்த 

அந்த தென்றலின் தீண்டலில் 

அந்த காலம் தனது உக்கிரத்தை 

தணித்து 

என்னை தேடி ஓடோடி வந்தது...

நான் நின்று அதனை 

என் மார்போடு பெரும் காதலோடு 

அணைத்துக் கொண்டபோது

என் தோளில் அதன் சில துளி 

உதிர்த்த கண்ணீரின் வெப்பத்தில் 

அதன் பெரும் காதலை 

உணர்ந்தேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 25/12/24.

நானும் அந்த நடுநிசியும் அந்த கோப்பையும்...


அந்த நடுநிசி பேரிருள் வேளையில் 

நானும் என் கையில் தவழும் 

அந்த மது கோப்பையும் 

அந்த பேரமைதியை ரசித்து 

கிடக்கிறோம்...

இடை இடையே ஒரு அபூர்வ 

பறவையின் இறக்கையின் 

ஒலியை நாங்கள் இருவரும் 

மறக்காமல் ரசித்துக் கொண்டே...

ஒருவரையொருவர் 

சிறு புன்னகை சிந்தி 

ஆழ்ந்த பேரன்பில் 

பேச்சற்ற நிலையில் 

பெரும் காதலோடு ரசித்து 

கண்களால் காதலை பருகி 

கிடக்கிறோம் பல மணி நேரம்...

அண்டமெங்கும் பகல் முழுவதும் 

அலைந்து திரிந்த சோர்வில் 

அத்தனை மனிதர்களும் 

ஓய்வெடுத்து உறங்குகிறார்கள்...

என்று கோப்பை தான் முதலில் 

பேச்சை ஆரம்பித்து வைத்தது...

ஆம் கோப்பையே... அவர்கள் 

வாழ்க்கையோடு தினம் தினம் 

போராடி அந்த நாளின் முடிவில் 

எந்தவித திருப்தியும் இல்லாமல் 

சோர்ந்து தான் போகிறார்கள் 

என்றேன்...

என் கையில் தவழும் 

அந்த கோப்பையோ நீ மட்டும் எப்படி

எந்தவித போராட்டமும் இல்லாமல்

ஆழ்ந்த அமைதி கொண்டு 

இதோ என்னோடு தினம் தினம் 

காதலோடு 

உரையாடி களிக்கிறாய் என்று 

ஆச்சரியமாக கேட்டது...

நானோ கொஞ்சம் 

சிரித்துக் கொண்டே 

இங்கே எதுவும் எனக்கானது இல்லை 

நான் இதோ எனை தீண்டி 

கடந்து செல்லும் 

இந்த நொடிப்பொழுதை 

கொஞ்சம் வேடிக்கை பார்க்க வந்த 

மனுஷனாக தான் 

என்னை பாவித்து 

இந்த பிரபஞ்சத்தில் 

உன் உதவியோடு மிதக்கிறேன்...

இங்கே நீயும் நானும் கொண்ட 

பெரும் காதலின் உணர்வை 

அதோ அந்த காலமும் 

பிரிக்க மனமில்லாமல் 

இரவை இன்னும் சில 

மணித் துளிகள் நாம் இருவரும்

கேட்காமலேயே நீட்டித்து 

சத்தம் இல்லாமல் செல்கிறது 

பார்த்தாயா என்றேன்...

அந்த நுரை ததும்பும் 

மது கோப்பையும் பெரும்

ஆச்சரியமாக ஆம் என்று 

தலையசைத்தது...

இந்த புரிதல் தான் 

வாழ்வின் சூட்சமம் 

இங்கே பெரும் மாயையின் நிழலில் 

இளைப்பாறுபவர்களுக்கு

இந்த காலத்தின் லீலையோ 

நம் பெரும் காதலின் ஈரமோ 

உணர முடியாது அல்லவா என்றேன்..

அந்த மது 🍷 கோப்பையும் 

ஆம் என்று பெரும் காதலோடு 

என் இதழ்களில் முத்தமிட்டதை 

பார்த்து அந்த அதிசய பறவையும் 

தன் சிறகசைப்பை நிறுத்தி 

வேடிக்கை பார்த்தது...

நானும் அந்த கோப்பையில் உள்ள 

என் பெரும் காதலை 

என் இதழ் வழியே பருகி 

அதை என்னுள் 

ஒன்றாக்கிக் கொள்ளும் போது

அந்த நடுநிசி கடந்த பெரும் இரவோ 

இன்றைய பெரும் காதலின் 

அத்தியாயம் முடிந்த திருப்தியில் 

அமைதிக் கொள்கிறது...

நானும் மெல்ல மெல்ல 

ஆழ்ந்த உறக்கத்தில் பேரமைதியின்

சாயலை என் காலடியில் 

சரிந்து விழுந்த அந்த காலி 

கோப்பையும் உணர்ந்து 

அமைதியாக அந்த நடுநிசி இரவை 

மெல்ல மெல்ல விடுக்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 25/12/24.

முன்னிரவு பொழுது...





செவ்வாய், 24 டிசம்பர், 2024

இது போல ஆயிரம் கதைகளை கேட்டும் சலிக்காமல்...

அந்த கண்ணாடி டம்ளரில் 

பொங்கி வழிந்து குதூகலித்து

எனை சீண்டல் பார்வையில் 

பெரும் போதையூட்டி

அழைக்கிறது வோட்கா!

நானும் என்னை கொஞ்சம் 

ஆசுவாசப்படுத்திக் கொள்ள 

மிடறு மிடறாக பருகி 

அதனிடம் காதல் மொழிகளை பேசி 

சரிகிறேன்...


என் மீது வழிந்தோடும் 

அந்த திரவமோ 

இது போல பல ஆயிரம் கதைகளை 

கேட்டும் சலிக்காமல் 

என் கன்னத்தில் 

ஒரு பெரும் முத்தத்தை 

கொடுத்து அதன் மடியில் 

உறங்க செய்து அந்த இரவை 

 கண்ணீரில் நனைத்து 

எனக்காக பிரார்த்தனை செய்து 

என்னை அரவணைத்து 

விடியும் நேரத்தில் 

கொஞ்சம் கண்ணயர்ந்து

 துயில் கொள்கிறது!

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 24/12/24

நேரம் அந்தி மயங்கும் வேளையில் 

ஞாயிறு, 22 டிசம்பர், 2024

இங்கே நிஜமெது நிழலெது?


கொஞ்சமும் சோர்வில்லாமல்

புத்துணர்ச்சியோடு

ஓடிக் கொண்டே இருக்கும் 

என் சாயலில் பயணிக்கும் 

காலத்தை நான் கொஞ்சம் 

ஆச்சரியமாக 

வேடிக்கை பார்த்து 

சிலை போல நகராமல் 

அந்த நெடுஞ்சாலையின் 

நடுவில் நிற்கிறேன் ...

என்னை கடந்து செல்லும் 

காலமெனும் வாகனத்தில் 

பயணம் செய்பவர்கள் ஏதேதோ 

எனை ஏசி விட்டு செல்கிறார்கள் என்று 

என்னிடம் கிசுகிசுத்து நகர்கிறது 

அந்த கால் இல்லாத காலம்...

நானோ இரு கால்கள் இருந்தும் 

ஊனமாகி முடங்கி கிடக்கிறேன் 

அந்த சாலையில்...

இங்கே நிஜமெது நிழலெது??

கொஞ்சம் புரிந்தவர்கள் 

சொல்லி விட்டு 

என்னை சாலையின் மறு பக்கத்தில் 

கொஞ்சம் சேர்த்து விட்டு 

செல்லுங்கள்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:22/12/24/ஞாயிற்றுக்கிழமை.

செவ்வாய், 17 டிசம்பர், 2024

அது தான் வாழ்வின் யாத்திரை...


எப்படியும் ஒரு நிகழ்வு நடந்த பிறகு 

இன்னொரு நிகழ்வு நடக்கத்தான் 

போகிறது 

அதை முன்பே அறிந்துக் கொள்ள 

ஏன் அவ்வளவு துடிக்கிறீர்கள்?

அதை முன்பே 

அறிந்துக் கொண்டால் மட்டும் 

உங்களுக்கு சாதகமாக 

முடிந்து விடப் போகிறதா என்ன?

அந்த நிகழ்வு உங்களுக்கு என்ன 

தர விரும்புகிறதோ அதை அது செவ்வனே நிகழ்த்தி விட்டு 

அது பாட்டுக்கு எந்தவித சலனமும் 

இல்லாமல் பயணித்து விடும்...

நீங்கள் ஏன் வீண் சஞ்சலம் கொண்டு 

அதனோடு சண்டையிட 

பெரும் கோபங்கொண்டு 

அதை துரத்தி செல்கிறீர்கள்?

அதை அப்படியே விட்டு விட்டு 

நீங்களும் சலனம் இல்லாமல் 

பயணிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்!

அது தான் பேரமைதி 

வாழ்வின் யாத்திரை!

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 18/12/24/புதன் கிழமை.

அப்படி ஒன்றும் மார்கழியை கொண்டாட...


அப்படி ஒன்றும் மார்கழியை 

கொண்டாட எனக்கு அதில் 

எதுவும் தற்போது இருப்பதாக 

தெரியவில்லை!

கடும் குளிரின் தாக்கத்தில்

போர்வைக்குள் அந்த மிதமான 

வெப்பத்தையும் 

ஊடுருவ துடிக்கும் 

இதமான குளிரையும் 

ரசிப்பதை நிறுத்தி விட்டு 

அந்த குளிரில் எழுந்து 

ஏதேதோ செய்து 

நான் ஒரு ஒழுங்கான 

தெய்வீக மனுஷி என்று 

நிரூபிக்க தற்போது மனமில்லை 

ஒரு தெளிவான அதீத ரசனையை 

தவிர 

எனக்கு இங்கே எதுவும் ஆனந்தத்தை 

கொடுத்து விடப் போவதில்லை 

என்று 

தீவிரமாக நம்பும் 

சாதாரண மனுஷி நான் 

அவ்வளவு தான்!

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 18/12/24/புதன்கிழமை.

காலத்திற்கு கட்டளையிடும் அதிகாரம்...


இங்கே காலத்திற்கு கட்டளையிடும்

அதிகாரத்தை 

எத்தனை கோடி யுகங்கள் 

தவம் இருந்தாலும் 

பெற முடியாது என்று 

தெரிந்தும் அந்த அதிகாரத்தை பெற 

இங்கே அகங்காரத்தோடு 

பெரும் தவத்தை 

இயற்றிக் கொண்டு இருக்கிறீர்கள்...

இதோ நீங்கள் அந்த உக்கிர தவத்தை 

இயற்றும் போதே ஊழிக் காலத்தின் 

பேரவையில் சிக்கி

 எவரும் கண்டறியா 

அந்த பெரும் மணல் திட்டின் 

ஆழத்தில் புதையுண்டு போவதை 

அதே காலம் எந்தவித அகங்காரமும் 

இல்லாமல் வேடிக்கை பார்த்து 

உங்கள் ஆன்மாவின் அமைதிக்காக 

இங்கே சலனமில்லாமல் 

பெரும் தவம் இயற்றி 

தன் பயணத்தை தொடர்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:18/12/24/புதன்கிழமை.

ஊழிக் காலத்தின் அருகே...


ஊழிக் காலத்தின் 

அருகே நடக்கும் 

பெரும் அமைதியின், சிறு துகளின் 

பேராற்றலின் சூட்சுமத்தை

இங்கே நான் உணர்ந்து 

ஆழ்ந்த அமைதியோடு 

பயணிக்கிறேன்..

என் தளர்வான நடையை பார்த்த 

சிலரோ புரியாமல் கேலி செய்து 

பெரும் சிரிப்போடு 

தகாத வார்த்தைகளால் கடிந்து 

என்னை கடந்த அடுத்த நொடியில் 

அந்த ஆழி பேரவையின் பெரும் பசிக்கு 

உணவாகிறார்கள்...

நானோ அவர்கள் சடலத்தை 

பொறுமையாக தேடி 

இந்த பூமிக்குள் முறையாக 

அடக்கம் செய்து 

எந்த சலனமும் இல்லாமல் 

பயணிப்பதை 

அந்த காலம் சற்றே புன்முறுவலோடு 

வேடிக்கை பார்த்து 

என்னோடு பயணிக்கிறது 

சூட்சமமாக...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 18/12/24/புதன்கிழமை.

வியாழன், 5 டிசம்பர், 2024

என் சாயலை ஏந்தி பயணிக்கும் அந்த நுட்பமான நதி...


எனது வாழ்க்கை பயணத்தின் 

சுவாரஸ்யத்தை 

கேட்க அங்கே 

ஆயிரம் ஆயிரம் காதுகள் 

தன்னால் முடிந்தவரை 

கூர் தீட்டி வைத்து காத்திருக்கிறது...

நானோ அந்த ரகசியத்தை

கொஞ்சமும் வெளியே 

வந்து விடாதபடி 

ஆழ்மனமெனும் அறையில் 

திணித்து 

ஒரு பெரும் பூட்டு போட்டு விட்டு 

அந்த சனநெருக்கடியான சாலையில் 

நடக்கிறேன் 

என் இயல்பு மாறாமல்...

இங்கே என் வாழ்வின் பயணத்தின் 

ரகசியமோ அந்த அறையில் இருந்து 

உருகி வழிந்தோடி பெரும் ஆறாக 

பயணிக்கிறது....

இப்போது அது அங்கே நதியில் 

இளைப்பாற நினைக்கும் 

அந்த பல இலட்சம் கால்களுக்கு 

கொஞ்சம் இதம் அளித்து

பயணிக்குமாறு அதற்கு 

கட்டளை இடுகிறேன்...

அதுவும் என் சாயலை ஏந்தி 

பயணிக்கும் நுட்பமான ஜீவனாக 

அந்த பெரும் மலைகளின் 

சிறு பாதை வழியே 

பயணிக்கும்போது நானும் ஏனோ 

அந்த நதியின் பயணத்தில் 

என் கால்களை வைத்த நொடியில் 

என் கண்களில் இருந்து 

சில சொட்டு கண்ணீர் 

அந்த நதியை வெப்பமாக்கி 

தாக்கியதில் அது கொஞ்சம் 

நிலைதடுமாறி ஆர்ப்பரித்து 

பின்பு நிலைத்து ...

என்னை நிலையை 

புரிந்துக் கொண்டு 

எனை வாரி அணைத்துக் கொண்டு 

நிசப்தமாக பயணிக்கிறது...

நானோ அந்த நதியில் எந்தவித 

பெரும் சக்தியும் இல்லாமல் 

மிதந்து செல்கிறேன்...

இந்த நிகழ்வை ஆச்சரியமாக 

வேடிக்கை பார்த்த மக்களுக்கு 

தெரியாது...

நான் அனுபவித்த 

பெரும் துன்பத்தின் 

ஆகர்ஷண சக்தி தான் 

இந்த நதியின் பயணமும் 

அதில் நான் மிதந்து செல்லும் 

நிகழ்வும் என்று...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 06/12/24/வெள்ளிக்கிழமை.






புதன், 4 டிசம்பர், 2024

அடுத்த திகில் நிமிடங்கள் இன்னும் கொஞ்ச தூரம் இருக்கிறது...


அந்த சாபத்தின் செந்தீ 

கடும் இருளில் துழாவி துழாவி 

என்னை பதம் பார்க்க வந்தது...

நானோ ஏதோ நினைவின் வழியே 

கொஞ்சம் சிந்திய கண்ணீரில்

அந்த செந்தீயின் மொத்த தகிப்பும் 

உள்ளடங்கி குளிர்ச்சியும் இல்லாமல் 

வெப்பமும் இல்லாமல் 

கிடந்த சாம்பலினை 

என் மேனி மீது பூசிக்கொண்டு 

அந்த திக்கற்ற நிர்க்கதியான 

பறவை போல இங்கும் அங்கும் 

அலைந்து திரிவதை பார்த்து 

அந்த இருளும் 

மேலும் கருமையை பூசி

கொஞ்சம் நடுநடுங்கி தான் 

அந்த மொத்த இரவையும் 

கண் துயிலாமல் 

பிரமை பிடித்தது போல 

கழித்தது...

நானோ அந்த கருக்கலில் 

என் மேனி எங்கும் பூசிய சாம்பலை 

உதிர்த்து விட்டு 

இந்த பிரபஞ்சம் அதிரும் வகையில் 

சிரித்து வைத்தேன்...

அதை பார்த்த அந்த பகல் பொழுதும் 

திக்கு தெரியாமல் 

சிதறி போனது கண்டு 

இந்த மனிதர்கள் 

கண் விழித்து பார்த்து மிரண்டு தான் 

போனார்கள்...

இரவோ 

அந்த நொடிப்பொழுதில் தான் 

கொஞ்சம் இறுக்கம் தளர்த்தி

நிம்மதி பெருமூச்சோடு

கண் அயர்ந்தது...

அடுத்த திகில் நிமிடங்கள் இன்னும் 

கொஞ்சம் தூரம் இருக்கிறது 

என்கின்ற தற்காலிக அமைதி 

கொண்ட மனதோடு...

இளைய வேணி கிருஷ்ணா.

நாள்:05/12/24/வியாழக்கிழமை.



அந்த பிணந்திண்ணி கழுகின் பசி...

அந்த பிணந்திண்ணி கழுகு  பசியாற எவ்வளவு தூரம் பயணித்தும் பயனில்லை அன்று... அன்று அதன் விதி அதுதானா என்று  சோர்ந்து அந்த மரக்கிளையில்  அமர்ந்த...