ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

பற்றற்ற காலமும் கொஞ்சம் வெறுப்போடு கடந்து செல்கிறது...


வெளிநாட்டில் இருந்து வரும் மகனுக்காக 

இங்கே அந்த இறந்த தந்தையின் சடலத்தை பூத கணங்களாக காவல் காக்கிறார்கள் இரவும் பகலும் அந்த சுற்றமும் நட்பும்...

உயிரோடு இருந்த போது 

அலைபேசியில் ஒரு சிறு நலம் விசாரிப்புக்கு நேரம் கிடைக்காதவர்கள்...

உயிரோடு இருந்த போது 

தன் தந்தையின் சிறு சிறு 

உரையாடலுக்கு காது கொடுத்து கேட்க இயலாத மகனின் அந்த வருகை...

இப்படி அனைத்தையும் 

வேடிக்கை பார்த்து பார்த்து அலுத்து விட்ட காலம் 

சரி இது சரிப்பட்டு வராது என்று 

கொஞ்சம் கொஞ்சமாக தீராத ஏக்கத்தோடு பயணிக்க காத்திருக்கிறோம்

அந்த சடலத்தின் மீது 

சிறு துர்நாற்றம் வீசி 

அனைவரையும் அந்த காவலில் இருந்து 

விடுவித்து காலதேவனின் கைகளில் 

அந்த சடலத்தை 

ஒப்படைத்து தனது கடமை முடிந்த 

திருப்தியில் 

அந்த இடத்தை 

கடந்து செல்கிறது 

பற்றற்ற காலமும் 

கொஞ்சம் வெறுப்போடு...

#காலத்தின்வெறுப்பு.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:09/09/24/திங்கட்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் போரின் உக்கிரத்தை தணித்து...

 நீயோ குருட்டு பிடிவாதத்தால் எவரின் தூண்டுதலாலோ விலகி விலகி பயணிக்கிறாய்  என்னிடம் இருந்து... அந்த உக்ரைனை போல... நானோ உன்னை  என் பேரன்பின் ...