ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023

கனவெனும் சாம்ராஜ்யம்

நிகழ்கால கனவுக்குள்
ஓடிக் கொண்டே இருக்கிறேன்
ஒன்று கனவு
மெய்ப்பட வேண்டும்
அல்லது கனவு கலையாமல்
அப்படியே
எனது கண்களுக்குள்
சிறையாக வேண்டும்..
தேவைகளே கனவுகளாக
இருந்துவிடக்கூடாது
என்று போராட்டம் இங்கே
கனவுகளே தேவைகளை
உருவாக்கக் கூடாது என்றும்
இங்கே ஒரு போராட்டம்..
இரண்டுக்கும் இடையில்
பெரும் போராட்டம் ஏதும் நடந்து விடாமல் பார்த்துக் கொள்வதில்
எனது சாமார்த்தியம் அங்கே
மதிப்பிடப்படுகிறது..
வெல்வேனா தோற்பேனா என்று
எனக்கு தெரியாது..
இரண்டையும் கடந்து வாழ்வதே
வாழ்க்கை இங்கே என்று
என்னுள் இருக்கும் ஒருத்தி மட்டும்
ஓயாமல்
முணுமுணுப்பது மட்டும் என் செவிகளுக்கு கேட்கிறது...
#இளையவேணிகிருஷ்ணா.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த வெறுமையோடு கூடிய பயணத்தில் ஒரு துணையாக...

அந்த வெறுமையோடு கூடிய  பயணத்தை  நான் பயணித்துக் கொண்டு  இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு  சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...