ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 19 அக்டோபர், 2019

நதியிடம் ஓர் கோரிக்கை

சலசலத்து ஓடும் நதியே
சகியின் நிலையை
கொஞ்சம் கேட்டு விட்டு
செல்லக்கூடாதா?
உனது ஓயாத பயணத்தை
கொஞ்சம் நிறுத்தி
என் கதையை கேட்டு
கொஞ்சம் தேற்றி ஆறுதல்
சொல்லி விட்டு செல்!
நீ போகும் வழிநெடுகே
என்னவர் எங்காவது கண்ணில்
உனக்கு படக்கூடும்!
அப்போது வலுக்கட்டாயமாக
உனது கைகளால் பிடித்து இழுத்து
அக்கரையில் சேர்த்து விடு!
அதுபோதும் எனக்கு!
நான் வந்து பார்த்து கேள்விகள்
கேட்டு கண்ணீரோடு
அந்த மனிதரிடம் மன்றாடிக்கொள்கிறேன்!
நான் கேட்கும் கேள்வியின் வீரியம்
தாளாமல் மீண்டும் உன்னை
நாடக்கூடும்!
அப்போதும் நீதான் காப்பாற்ற வேண்டும்!
அவருக்கு உன்னிலும் நீந்தி
கரையேற தெரியாது!
என்னையும் சேர்த்து
சம்சார சாகரத்தில் நீந்தி
கரையேற தெரியாது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்க்கை ஒரு புயலில் சிக்கிய ஓடம்...

தேடல் இல்லாத வாழ்க்கை  வறண்ட பாலை போன்றது  என்று அங்கே யாரோ ஒரு வாழ்க்கை  பயணி தன் உடன் பயணிப்பவரிடம்  சொல்லி செல்கிறார்... நானோ அந்த வார்த்...