அந்த பிணந்திண்ணி கழுகு
பசியாற எவ்வளவு தூரம்
பயணித்தும் பயனில்லை அன்று...
அன்று அதன் விதி அதுதானா என்று
சோர்ந்து அந்த மரக்கிளையில்
அமர்ந்து சூரியன் அஸ்தமிப்பதை
கவலையாக பார்த்து சிறகை ஒடுக்கி
வெறுமனே வேடிக்கை
பார்த்த வேளையில் தான்
என் அகங்காரத்திற்கு
உயிர் கொடுத்து உருவமாக்கி
அதற்கு உணவாக்கி கொஞ்சம்
நகர்ந்து அந்த கழுகை
கண்காணித்தேன்...
ஆவலாக பறந்து வந்து
அதை ஆக்ரோஷமாக தின்று
தீர்க்கிற வேளையில் காலம்
என்னிடம் ரகசியமாக கிசுகிசுத்தது...
ஒரு பிணந்திண்ணி கழுகின்
ஒரு யுகத்தின் பசியை ஒரு நொடியில்
தீர்த்து விட்டாயே
நீ மஹா காலனா என்று ஆச்சரியமாக
கேட்ட வேளையில்
அந்த 🦅 பிணந்திண்ணி கழுகு
உண்ட களைப்பில்
ஆழ்ந்த நித்திரையில்
அமைதிக் கொள்வதை
பார்த்து நானும் ஒரு யுகத்தின்
பேரமைதியை பெற்றுக் கொண்டேன்
இந்த பிரபஞ்சத்திடமிருந்து...
இதை பார்த்த காலமும்
ஆழ்ந்த அமைதியில் எங்களை விட்டு
நகர்வதை அந்த சூரிய அஸ்தமனமும்
வேடிக்கை பார்த்து
ஏதோவொரு மன திருப்தியில்
அந்த மலைக்கு பின்னால்
ஓய்வெடுக்க செல்கிறது...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 21/01/25/செவ்வாய் கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக