ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 7 ஜனவரி, 2025

நான் தேடும் ஆறுதல்...


ஏன் என்று தெரியவில்லை 

 எனக்கான தேடலில் 

எல்லாம் எப்போதும் கடலை தவிர 

வேறெதுவும் எனக்கு ஆறுதல் 

தருவதாக தெரிவதில்லை!

ஏதோ அமிர்தம் இதில் இருந்து 

கிடைத்ததால் கூட இருக்கலாம் 

நான் தேடும் ஆறுதல் கடலாக 

இருப்பதற்கு!

அந்த அமிர்தம் கையில் 

கிடைக்காமல் 

போனாலும் கூட நான் கடலை 

நேசிப்பேன்!

ஏனெனில் எனக்கான 

தேடலின் வெறுப்பில் 

நஞ்சை கக்குவதும் 

அதே கடல் தானே!

இரண்டுக்கும் வேறுபாடு 

நான் பார்ப்பதில்லை!

ஒன்று வாழ்வின் ருசியையும் 

இன்னொன்று வாழ்வின் 

எச்சத்தையும் 

எனக்குள் உணர்த்தி விட்டு 

சத்தம் இல்லாமல் 

உயிர்ப்போடு நகர்ந்து செல்கிறது..

இது காலத்தின் தேடலாக 

இருக்கும் போது 

நான் என்ன கருத்து சொல்ல முடியும்?

கொஞ்சம் நீங்களே சொல்லுங்கள் 🧐😌

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:07/01/25/செவ்வாய் கிழமை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த பிணந்திண்ணி கழுகின் பசி...

அந்த பிணந்திண்ணி கழுகு  பசியாற எவ்வளவு தூரம் பயணித்தும் பயனில்லை அன்று... அன்று அதன் விதி அதுதானா என்று  சோர்ந்து அந்த மரக்கிளையில்  அமர்ந்த...