எப்படி பார்த்தாலும்
அவ்வளவு தான் வாழ்க்கை என்று
அந்த ஒற்றை நொடியில்
புரிந்துக் கொண்டு
நின்று நிதானமாக
ரசிக்க தொடங்கியது
அங்கே நடந்துக் கொண்டு இருக்கும்
சில மனிதர்களின் வேடிக்கை
நிகழ்வுகளை எனது கால்கள்...
நான் நின்று கொண்டு இருக்கும்
இடத்தில் திடீரென
ஒரு அபூர்வ பூவின்
வாசனையை உணர்ந்த
தருணத்தில் தான் என்னை
அந்த வேடிக்கை மனிதர்கள்
கவனிக்க ஆரம்பித்தார்கள்...
நானோ அவர்கள் கைகளை குலுக்கி
உற்சாகமாக விடைபெற்று
அந்த நெடுஞ்சாலையில்
நடக்கும் போது மீண்டும்
உயிர் பெற்று
என்னோடு பயணிக்கிறது
நான் சலிப்படைந்த
அந்த ஒற்றை நொடி வாழ்க்கை!
இங்கே எப்போதும் எனக்காக
காத்திருக்கும்
அந்த ஒற்றை நொடிப் பொழுதின்
பெரும் காதலுக்கேனும்
நான் இந்த காலத்தின்
நெடுஞ்சாலையில்
பயணித்தாக வேண்டும் என்ற
கட்டாயத்தில் இருக்கிறேன்...
அந்த ஒற்றை நொடியோ
பெரும் காதலோடு என்னோடு
அபூர்வ சுவையோடு
என்னில் கலந்து பயணிக்கிறது...
மீண்டும் அந்த வேடிக்கை மனிதர்கள்
எங்கேனும் தென்பட்டால்
நான் அவர்களிடம் பகிர
என்னிடம் ஒரு பெரும் காதல் கதை
உள்ளது...
அது வேறு யாரும் அல்ல...
நானும் என்னை நேசிக்கும்
அந்த ஒற்றை நொடியும் தான்...❤️.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 19/01/25/ஞாயிற்றுக்கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக