ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 18 அக்டோபர், 2024

அந்த புதையுண்ட கனவுகள்...

 


புதையுண்ட கனவுகள் 

அன்றொவொரு நாள் 

திடீரென எழுந்து 

எனை கேள்வி கேட்கும் காலத்தில் 

அப்போது பெரும் சமாதானமாக 

ஏதேதோ சொல்லி சமாளிக்கிறேன்

சமாதான பேச்சில் தோற்று 

சோர்ந்து அமருகையில்

அங்கே காலம் எனக்காக 

விட்ட இடத்திலிருந்து 

பேச்சு வார்த்தை 

நடத்திக் கொண்டு 

இருக்கும் போது தான் 

முழுவதும் குழம்பி போகிறேன்...

என் கனவை சிதைத்தது

காலமோ அல்லவோ 

தெரியவில்லை 

எனினும் யாருமற்ற தனிமையின் 

வெறுமையில்

அந்த புதையுண்ட கனவினை

சுவாசித்து சுவாசித்து 

மூர்ச்சையாகி வீழும் போது 

அந்த காலத்தின் தோள்கள் 

என் ஆசுவாசத்தை 

புரிந்துக் கொண்டு 

மெல்ல 

அணைத்துக் கொண்டு பேச்சற்ற மௌனத்தில் என் சோகத்தின் சுமைகளை 

கொஞ்சம் கொஞ்சமாக 

வெளியேற்றி எனை கணமற்ற 

மனுஷியாக்கி 

பறக்க வண்ண சிறகுகளை 

கொடுத்து நான் பறப்பதை 

சிறு பிள்ளையாக வேடிக்கை 

பார்த்து ஆனந்தம் கொள்வதை எப்படி 

என்னால் ஊதாசீனப்படுத்த முடியும் 

என்ற எனக்குள் கேள்வி கேட்டு 

பெரும் சமாதானம் ஆகிறேன்...

அந்த பெரும் கனவினை 

என் அருகே ஒரு கல்லறையில் 

புதைத்துக் கொண்டு ...

#பெரும்கனவு.

நாள் 18/10/24/வெள்ளிக்கிழமை.மழைக்கால இரவொன்றில் 

#இளையவேணிகிருஷ்ணா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் போரின் உக்கிரத்தை தணித்து...

 நீயோ குருட்டு பிடிவாதத்தால் எவரின் தூண்டுதலாலோ விலகி விலகி பயணிக்கிறாய்  என்னிடம் இருந்து... அந்த உக்ரைனை போல... நானோ உன்னை  என் பேரன்பின் ...