ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 18 அக்டோபர், 2024

வாழ்வின் கேள்வி கணைகளும் நானும்...


அடுக்கடுக்காக என்னிடம் 

இடைவிடாது கேட்டுக் கொண்டே 

இருக்கும் வாழ்வின் 

கேள்வி கணைகளுக்கு மத்தியில் ஒரேயொரு நொடிப்பொழுதில் கிடைத்த ஆசுவாசம் அது 

அதோ அங்கே மேகங்களுக்குள் சிறிது சிறிதாக மறைந்துக் கொண்டு இருக்கும் நிலவு...

வாழ்க்கையோ நான் எந்த கேள்விக்கும் பதில் அளிக்காத கோபத்தில் 

என் மீது கோபம் கொண்டு 

இன்னும் பல கேள்வி கணைகளால் தொடுத்து காயப்படுத்த முயற்சி செய்யும் போது 

மீண்டும் மேகத்தின் திரையில் இருந்து விடுபட்டு 

என்னை ஆட்கொண்டு ஆனந்த கூத்தாட வைக்கிறது நிலவு...

இந்த நிகழ்வுகளை 

கொஞ்சம் வேடிக்கை பார்த்த 

என் காலமோ 

நீ எப்போதும்  

என் பிரதிபிம்பமாகவே 

பயணிக்கிறாய் என்று 

ஒரு கை குலுக்கலோடு 

மறக்காமல் தேநீர் போட சொல்லி வாங்கி பருகி விட்டு தான் சென்றது...

#வாழ்வின்கேள்விகணைகள்

நாள் 18/10/24/வெள்ளிக்கிழமை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்க்கை ஒரு சமன்பாடு தான் -சூபிஞானி கதை 🎉🦋

  வணக்கம் நேயர்களே 🎻🙏  இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...