ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 3 அக்டோபர், 2024

தொலைதூர மேகம் ஒன்றில் நுழைந்த மெல்லிய காற்று


தொலைதூர மேகம் ஒன்றில் 

நுழைந்த மெல்லிய காற்று ஒன்று 

என் இன்றைய பயணத்தின் 

களைப்பை போக்க 

என் மேனியை மெல்ல வருடி 

செல்லும் பேரன்பில் 

இந்த பிரபஞ்சத்தின் 

சிறு துளி நிழலில் கொஞ்சம் 

இளைப்பாறி களிக்கிறேன் 

இரவோ என் குதூகலத்தில் 

கொஞ்சம் வியந்து தான் போனது...

எப்படி இவ்வளவு எளிதாக 

ஒரு மனுஷியால் 

முழுமையான பேரானந்தத்தில் 

திளைக்க முடிகிறது...

இப்போது இருக்கும் 

நெருக்கடியான காலகட்டத்தில் 

என்று...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்க்கை ஒரு சமன்பாடு தான் -சூபிஞானி கதை 🎉🦋

  வணக்கம் நேயர்களே 🎻🙏  இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...