அந்த மது கோப்பையில்
தளும்பி வழியும் பழரசத்தினை
கொஞ்சம் கொஞ்சமாக
அதை தொடாமலேயே
ரசனை நிறைந்த மனதோடு
வேடிக்கை பார்க்கிறேன்...
செயற்கை வழியில் இருளாக்கப்பட்ட
அந்த விடுதியில் பல உயர் ரக
மின்னொளியில்
நனைந்து கிடக்கிறது
அந்த பழரசம்....
அதன் மீது பட்டு தெறிக்கும்
கண் கூசும் ஒளியை
கொஞ்சம் பிரமிப்போடு
பார்த்து கிடக்கிறேன்
கைகளை
என் தலையின் பின்புறம்
கம்பீரமாக கட்டிக் கொண்டு
அந்த கோப்பையை எவ்வளவு நேரம்
ரசித்து இருப்பேன் என்று
தெரியாது....
அங்கே பல மது பிரியர்கள்
மது போதையில் யாரையோ
கட்டியணைத்து
செயற்கையாக நடனமாடி
செயற்கையாக தனது
மனக் கவலையை மறக்க துடித்து
ஏதேதோ பிதற்றல் ஒலியை
எழுப்பி அங்கே ஒலிக்கும்
இசைக்கு ஏற்ப தன்னிச்சையாக
கால்கள் நடனமாடுவதை
நான் கொஞ்சம் வேடிக்கை
பார்த்து ரசிப்பதை பார்த்து
என் மேசை மீதிருந்த
அந்த மது 🍷 கோப்பை
என் வித்தியாசமான ரசனையை
கண்டு வியப்புற்று திகைத்து
அந்த மேசையில் கவிழ்ந்து
விழுகிறது...
அந்த கண்ணாடி கோப்பையின்
நங் என்று மேசை விட்டு
உருண்டோடி கீழே விழும் ஓசையில்
அத்தனை பேரும் எனை திரும்பி
பார்த்து ஆறுதல் சொல்லி
இன்னொரு பழரசத்தை
கொண்டு வந்து என் முன்பு
மேசை மீது கனிவோடு வைத்து
செல்கிறார்கள்...
இப்போது புது பழரச கோப்பையை
கொஞ்சம் பரிதாபமாக
கண்கள் பனிக்க
பார்க்கிறேன் நான் ...
அந்த மெல்லிய மின்னொளியில்
என்னால் உயிர் மாய்த்துக் கொண்ட
அந்த ரசனையான
முதல் மது 🍷 கோப்பையை
நினைத்து...
#ரசனையான 🍷 கோப்பை..
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 27/10/24/ஞாயிற்றுக்கிழமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக