ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

கோரமான ஈரம்

 

அந்த வெற்று நிழலில்

இளைப்பாற தேடுதலின்

கொடுமை இங்கே

எவரும் அறிய முடியாது..

உண்மையில் 

ஒன்றும் அறியாத

எவரோ ஒருவர் இங்கே

ஆழ்ந்த பாதிப்புகளை

எதிர்க் கொண்டு

எதுவுமே நடவாதது போல

நடந்துக் கொள்ளும்

ஒரு நிகழ்வை அந்த ஒருவர்

எதிர்கொள்வது எவ்வளவு

பெரிய கொடுமை என்று

எத்தனை கோடி விளக்கங்கள் கொடுத்தாலும்

கேட்பவர்களுக்கு புரிய வைக்க இயலாது...

இங்கே அவர்கள் ஒரு கதை கேட்பது போல

கடந்து

சென்று விடுகிறார்கள்

என் நிகழ்வை...

அந்த நிகழ்வின்

கோரமான ஈரத்தை

சுமந்து திரிகிறேன்

ஒரு அநாதையாக...

உண்மையில் அந்த கோர ஈரத்தை நான் மகிழ்வோடு

ஆனந்தமாக சுமந்து திரிகிறேன்...

இங்கே அது மட்டுமே நிதர்சனம்...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீள் இரவின் கொடுமை...

  நீ பிரிந்து சென்ற  ஒவ்வொரு நாளின்  இரவையும்  கடந்து செல்வது  அவ்வளவு எளிதல்ல  எனக்கு... அது நரகத்தின் வேதனையை  எனக்கு தந்து  அந்த காயத்தில...