ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 19 நவம்பர், 2024

அந்த கட்டமைக்கப்பட்ட பிம்மத்தின் பிடியில்...


அந்த கட்டமைக்கப்பட்ட 

பிம்மத்தின் பிடியில் இருந்து 

திமிரி வெளியே வர 

ஆயிரம் ஆயிரம் பிரயத்தனங்களை 

செய்து அசந்து போய் 

கண்ணீரோடு அமர்கிறேன்...

என் அருகே ஒரு பட்டாம்பூச்சியோ

எந்தவித பிரயத்தனமும் 

இல்லாமல் என் தோளை 

மிகவும் மிகவும் மிருதுவாக உரசி 

பறந்து செல்வதை பார்த்து 

கொஞ்சம் ஆசுவாசம் கொண்டு 

எழும் போது என் மீது 

கட்டமைக்கப்பட்ட 

அந்த பிம்பத்தின் பிடி இலகுவாகி 

எனை கொஞ்சம் கொஞ்சமாக 

அதன் பிடியில் இருந்து 

விடுவிக்கிறது...

விடுவிக்கப்பட்ட அடுத்த நொடியே 

அந்த பட்டாம்பூச்சி சென்ற பாதையில் 

ஓடும் போது கொஞ்சம் நில் 

என்ற சத்தத்துடன் காலம் 

எனை கை நீட்டி தடுப்பதில் 

கொஞ்சம் எரிச்சல் அடைந்து 

என்ன என்று கோபமாக 

நிமிர்ந்து அதை கேள்வி 

கேட்கும் போது 

அதுவோ கொஞ்சமும் 

பதட்டம் இல்லாமல் 

தனது குறிப்பால் உணர்த்துகிறது 

என் கால்களில் மிதிப்பட்ட 

அத்தனை பூக்களின் வலியை...

நானோ இப்போது மீண்டும் 

அழுகிறேன்...

என் கால்களுக்கு இரையான 

அந்த பூக்களின் தேகத்தில் ஏற்பட்ட 

காயத்தில் இருந்து வழியும் 

உதிரம் கண்டு...

இங்கே எந்த கட்டமைப்பும் 

இல்லாமல் கூட பல வேதனைகள்

வகுக்கப்பட்டு விடுகிறது...

இங்கே நடக்கும் விதியின் போக்கில் 

திமிரி செல்ல எத்தனை எத்தனை 

சோதனைகள்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 20/11/24/புதன்கிழமை.

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் போரின் உக்கிரத்தை தணித்து...

 நீயோ குருட்டு பிடிவாதத்தால் எவரின் தூண்டுதலாலோ விலகி விலகி பயணிக்கிறாய்  என்னிடம் இருந்து... அந்த உக்ரைனை போல... நானோ உன்னை  என் பேரன்பின் ...