நேற்று காலை வரை
அந்த ஒழுகும் வீட்டில்
ஒண்ட வழி இல்லாமல்
சுண்ணாம்பு பேர்ந்து விழும்
அந்த சுவரோரமாக
பேய் மழையின் கோரத்தில்
இருந்து
விடுவித்துக் கொள்ள
கைகளை கால்களுக்கு இடையே
முட்டுக் கொடுத்து
நடுநடுங்கி இரவை உறங்காமல்
உறங்கி கழிக்கிறான் அவன்...
அவன் நிலையை அக்கம் பக்கம்
எவரும் அறியாமல் இல்லை...
கண்டுக் கொள்ள தான் மனம்
இல்லை அவர்களுக்கு
இரவு கழிந்தது...
மெல்ல மெல்ல விடியலின் சுவடில்
எழுந்த
அந்த பக்கத்து வீட்டுக்காரர் தான்
முதலில் அலறினார்...
எல்லோரும் வாருங்கள் இங்கே
சுவர் இடிந்து இங்கே மூர்த்தி
இறந்து விட்டான் என்று...
அதை பார்க்க ஓடோடி வந்த மக்கள்
ஒருவருக்கொருவர்
பச்சாபிதமாக
பேசிக் கொண்டார்கள்
பாவம் இரவு அவனை
நாம் நமது வீட்டுக்கு கூப்பிட்டு
அடைக்கலம் கொடுத்து இருக்கலாம்
என்று ...
இங்கே மரணத்தின் மீது
வீசப்படும் பூக்களுக்கு
மதிப்பு இல்லை என்று
அங்கே ஒரு முற்றும் துறந்த ஞானி
உரக்க சிரித்துக்கொண்டே
சொல்லி விட்டு அந்த வீதியை கடக்கிறார்...
#மரணத்தின்மீதுவீசப்பட்டபூக்கள்.
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 13/08/24/செவ்வாய் கிழமை.
ஆமா உசுரோட இருக்கும் போது எவனும் கண்டுக்க மாட்டான்
பதிலளிநீக்குஉண்மை தான்...
பதிலளிநீக்கு