நீ அனைத்தையும்
இழந்து விட வேண்டும் என்று
காலம் எனக்கு கட்டளையிட்டு
கேட்டு கொண்டது...
அதனால் என்ன இழந்து விட்டால்
போயிற்று என்று
சொல்லி விட்டு
ஆமாம் நான் அப்படி என்ன
வைத்து இருக்கிறேன் இழப்பதற்கு
என்னிடம் இருக்கும் சுவாசம் கூட
அந்த வெற்றிடத்தில் இருந்து தான்
எனக்கு போனால் போகிறது என்று
கடனாக கிடைக்கிறது
கொஞ்சம் இந்த உலகில் உள்ள
நிகழ்வுகளை
வேடிக்கை தான் பார்த்து விட்டு
போகட்டுமே
பாவம் இவள் என்று...
வேறு நீ எதை இழக்க கேட்கிறாய் காலமே...
அப்படி ஏதேனும் இருந்தால்
நீ எனக்கு கொஞ்சம் நினைவூட்டு...
அது எங்கே இருந்து எனக்கு கடனாகவோ உபகாரமாகவோ வருகிறது என்று தெளிவுப்படுத்துகிறேன் என்றேன் கலகலவென சிரித்து
காலமோ போதும் போதும் உனது சிரிப்பை நிறுத்து...
இதை உனது நிதியமைச்சரிடம் எவரேனும் போட்டுக் கொடுத்து விட்டால்
நீ அதற்கு தனியாக பெரும் கப்பம் கட்ட வேண்டியதாக இருக்கும் என்றது வேடிக்கையாக...
அப்பொழுது நான் உன்னை கை காட்டி விடுவேன் ...
இங்கே வரி கட்டாமல் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் விளையாடி பெரும் சொத்தை சேர்த்து வைத்து இருக்கிறார் இந்த காலம் என்று சொல்வேன் என்றேன்...
காலமோ அடுத்த நொடியில்
கரைந்து போனது...
#காலமும்நானும்நிதியமைச்சரும்.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 16/08/24/வெள்ளிக்கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக