ஒரு நதி இங்கே
எந்தவித சலனமும்
மனதில் கொள்ளாமல்
சத்தம் இல்லாமல்
நூல் பிடித்தது போல
விதி எழுதிய போக்கில்
பயணித்துக் கொண்டு தான்
உள்ளது...
காலமாகிய நான் உங்களிடம்
கேட்டுக் கொள்வதெல்லாம்
அந்த பயணத்தில் ஒரு சிறு கூழாங்கல் கூட எறிந்து சலனப்படுத்தாமல்
அதை அதன் போக்கில்
பயணிக்க விடுங்கள் என்பதே...
நீங்கள் அந்த நதியில் நீராடி
கலங்கப்படுத்தி பாவத்தை அந்த நதியில்
கலக்காமல் இருந்தாலே போதும்
அது தனது தவ பலத்தால்
சுவையான நீரோடு பயணித்து என்னில் கலந்து விடும்...
அது என்னுள் உமிழும் அமிர்தத்தை கொண்டே
என் ஆயுளை நீட்டித்து
உங்கள் வாழ்வில்
உங்களோடு பயணிக்கும் பாவ புண்ணிய கணக்கை
கணக்கிட்டு
எனது பயணத்தில் சிறு பின்னமும்
ஏற்படாமல்
யுகம் யுகமாக பயணித்து
தர்மத்தின் தாரையை
இந்த பிரபஞ்சத்தில் நிலைநாட்டுவேன்..
#ஒருநதியின் சலனமில்லாத பயணம்.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 23/08/24/வெள்ளிக்கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக