ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

உயிர் விசும்பலின் ஓசை...


உயிர் விசும்பலின் ஓசையை 

அந்த நுண்ணிய காற்று 

உள்வாங்கி ஆறுதல் 

சொல்கிறது...

தேற்றுதலின் நெடியை 

அறியாத அந்த உயிர் 

கொஞ்சம் தடுமாறி தான் போகிறது...

சுற்றிக் கொண்டே இருந்து 

பழக்கப்பட்ட தேகத்தை 

திடீரென அந்த பாழடைந்த வீட்டில் 

சிறையில் இடும் போது 

ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் 

இங்கும் அங்கும் கதறி திரிந்து 

அந்த இருண்ட அறைக்குள் 

ஓடும் போது 

எங்கோ இருந்து வந்த 

அந்த தெய்வீக இசையின் 

வருடலில் அமைதியடைகிறது...

இங்கே ஒரேயொரு நுண்ணிய 

உணர்வு மட்டும் போதுமானதாக 

இருக்கிறது 

அத்தனை பாரங்களையும் 

சுக்கு நூறாக்கி இலேசானதாக 

உணர என்று 

அமைதிக் கொள்கிறது 

இந்த பாழும் மனது...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:06/08/24/செவ்வாய் கிழமை

2 கருத்துகள்:

சித்த நிலை யாதென்று புரிகின்ற வேளையில்...

சித்த நிலை யாதென்று  புரிகின்ற வேளையில்  சுவையுள்ள பதார்த்ததின் வாசம்  நாசியை வசீகரிக்கிறது... சுத்தமான ஆத்மாவின்  தீராத தாகத்தை கண்டுக்கொள்...