ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 28 ஜூலை, 2024

அந்த வஞ்சிக்கப்படாத இரவொன்றில்...


அந்த வஞ்சிக்கப்படாத 

இரவொன்றில் 

சற்றே அந்த பாறையில் 

இளைப்பாறுகிறேன் 

எனக்கு பிடித்த 

அந்த தேநீர் கோப்பையோடு 

அங்கே சுற்றி திரிந்த மானொன்று என் அருகில் வந்து ஒரு தீர்க்கமான பேரன்போடு நின்றது...

என் தேநீர் கோப்பையை பயத்தோடே முகர்ந்து பார்த்து விட்டு என்னை மிரட்சியோடே பார்த்தது...

நான் அதை தடவி கொடுத்து 

அந்த தேநீரை சுவைக்க கொடுத்தேன்...

அந்த சுவை அதற்கு பிடித்து விட்டதோ தெரியவில்லை 

என்னை ஒரு திருப்தியாக 

பார்த்தது...

நானும் அதை பார்த்து புன்னகைத்தேன்...

பிறகு என்ன நினைத்ததோ 

என் அருகில் அமர்ந்து கொண்டது...

நான் அதை கொஞ்சம் வருடி விட்டு அந்த வனத்தின் அழகை இருளில் ரசிக்கிறேன் ...

நானும் அந்த மானும் மௌனத்தில் ஒரு ஆழ்ந்த உரையாடலை நிகழ்த்தி விட்டு விடை பெற எத்தனிக்கும் போது 

அந்த இரவு ஒரு செருமலோடு எச்சரித்தது 

நீங்கள் பேசிய ரகசியம் நானும் அறிவேன் என்று..

நான் அதனால் என்ன என்று அதற்கு ஒரு புன்னகையை உணர்த்தி விட்டு அந்த மானை மீண்டும் ஒரு பாசத்தோடு வருடி விட்டு 

விடை பெறும் போது 

அந்த மான் மீண்டும் எப்போது இந்த வனத்திற்கு என்று மௌனமாக கேட்டது...

ஓ அதுவா மீண்டும் இது போல வஞ்சிக்கப்படாத இரவொன்று அமையும் போது என்றேன்...

அது அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளாமல் அமைந்து விடும் எனக்காக இந்த வனத்திற்காக என்றது 

மௌனமொழியில்...

இதை எல்லாம் சாட்சியாக கவனித்து வந்த 

அந்த வனம் கொஞ்சம் ஆச்சரியமாக எங்களை பார்த்தது...

#வஞ்சிக்கப்படாத #இரவொன்றில் 

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 29/07/24/திங்கட்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் போரின் உக்கிரத்தை தணித்து...

 நீயோ குருட்டு பிடிவாதத்தால் எவரின் தூண்டுதலாலோ விலகி விலகி பயணிக்கிறாய்  என்னிடம் இருந்து... அந்த உக்ரைனை போல... நானோ உன்னை  என் பேரன்பின் ...