ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 19 ஜூலை, 2024

தப்பித்தல்...🏃


அங்கே வேகமாக ஓடிக் கொண்டே 

இருக்கும் அந்த மனிதருக்கு 

இப்படியாக தத்துவத்தை 

போதிக்கிறேன்..

ஏதோவொன்றிக்காக 

ஓட துவங்குகிறீர்கள்...

அது அந்த ஒன்றை திருப்தி செய்ய 

என்று நினைத்தீர்கள் என்றால் 

நிச்சயமாக அது மாபெரும் பொய் 

என்று உங்களுக்கே தெரியும் ...

பிறகு ஏன் ஓட வேண்டும் என்று 

கேட்டுக் கொண்டே 

ஒரு அனிச்சை செயலாக 

ஓடிக் கொண்டே இருக்கிறீர்கள் 

பாருங்கள் அது தான் 

மாபெரும் மாயா ...

இங்கே ஓடுவது என்பதே மிகவும் 

மோசமான மாயை என்று 

அங்கே அந்த மனிதருக்கு 

சொல்லிக் கொண்டே 

இருக்கும் போதே 

அவர் அதைப் பற்றி சிந்திக்க 

துவங்கும் போது 

வேகமாக அவரை தரதரவென 

இழுத்துச் சென்றார் 

 ஓடுவதில் அதி தீவிர 

எண்ணம் கொண்ட 

இன்னொரு மாய மனிதர் ...

அதை பார்த்து நான் ஒன்றும் 

அதிர்ச்சி அடையவில்லை ...

மாறாக நிம்மதி பெருமூச்சு விட்டேன்...

ஏனெனில் அந்த மாய மனிதர் 

எனை இழுத்துக் கொண்டு 

ஓடவில்லையே என்று...

இங்கே ஒன்றில் இருந்து 

தப்பிப்பது என்பதே 

தெருவில் கூவி கூவி 

ஏதோவொன்றை 

விற்றுக் கொண்டு இருக்கும் 

மனிதர்களை லாவகமாக விலக்கி 

நடப்பதை போன்றது தானே என்று 

என்னை நானே தேறுதல் 

செய்துக் கொண்டு நடக்கும் போது 

அங்கே எங்கிருந்தோ வந்து

என் முகத்தில் அறைந்து மெதுவாக 

இழுத்து செல்லும் தென்றலின் 

பேரன்பை மட்டும் விலக்க 

மனமில்லாமல் அதனோடு நான் 

மெல்லிய புன்முறுவலோடு 

ஓடுகிறேன்....

#இளையவேணிகிருஷ்ணா.

#தப்பித்தல்.

நாள் 20/07/24.

சனிக்கிழமை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காலை சிந்தனை ✨

இனிமையான  இந்த காலைப்பொழுது  உங்களுடைய புதிய  உற்சாக நிகழ்வுக்கான  தொடக்கம் ... இன்பமும் துன்பமும்  நம் மனதில் விளைந்த கற்பனை  அதை கொஞ்சம் வ...