ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 1 ஆகஸ்ட், 2018

பயணம்

அன்பர்களே வணக்கம்.
           நாம் இப்போது பார்க்க இருப்பது பயணம். பயணம் என்பது நமது வாழ்க்கையில் இரண்டற கலந்தது.பலருக்கு பயணமே வாழ்க்கையாக அமைந்து விடுவதும் உண்டு. சிலருக்கு சிற்சில காரணங்களுக்காக பயணம் மேற்கொள்வதேம் உண்டு. ஆனால் பயணம் என்பது நிச்சயம்.
       குழந்தைகள் பயணத்தை மிகவும் விரும்புவார்கள்.ஏனெனில் பயணம் அவர்களுக்கு பல வேடிக்கை காட்சிகளை காட்டுகிறது. அதனால் வீட்டில் ஊருக்கு என்று சொல்லி விட்டால் போதும் அவர்கள் ஆனந்தத்திற்கு அளவே இருக்காது.அந்த வயதில் தான் நாம் பெரும்பாலும் பயணத்தை ரசித்து இருப்போம் என்பது உண்மை.
       மற்றபடி நாம் போயே ஆக வேண்டும் என்கிற பயணம் என்பது அதாவது கட்டாய பயணம் என்பது நமக்கு பிடிக்காது என்பது மட்டும் அல்ல. மிகவும் எரிச்சலையும் சோர்வையும் கொடுத்து விடும். சில சமயங்களில் நாம் பயணத்தை வெறுத்தே பயணத்திருப்போம்.
     சரி இப்போது நம் பயணத்திற்கு வருவோம். நாம் இப்போது மேற்கொண்டு இருப்பது வாழ்க்கை பயணம். நமது வாழ்க்கை பயணத்தில் நம்முடன் நமது வாழ்க்கை துணை நமது பெற்றோர் நமது குழந்தைகள் நமது உறவினர்கள். இதில் கிட்டத்தட்ட இடையே இறங்கி விடுபவர்கள் உறவினர்கள். அது நம்முடன் ஏற்பட்ட பிணக்கு மற்றும் நமது வாகனம் அவர்களுக்கு சௌகரியமாக கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாம் அவர்களை இறக்கி விட்டு விட்டு போய் கொண்டே இருப்பது தான் நமக்கு நல்லது. ஏனெனில் நாம் அவர்களை சமாதானம் செய்கிறேன் என்கிற பெயரில் அங்கேயே இருந்து விட்டால் நமது வாழ்க்கை துணை மற்றும் பிள்ளைகள் நம்மை விட்டு பயணிக்க ஆரம்பித்து விடுவார்கள். இது எப்படி இருக்கிறது என்றால் ஒரு பேருந்தில் ஓட்டுநரை விட்டு விட்டு ஓட்ட தெரியாத நடத்துனர் ஓட்டிக்கொண்டு பயணிப்பது போல.அதனால் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .
            அதுசரி.நம்முடன் பயணிக்கும் வாழ்க்கை துணையும் குழந்தைகளும் நிரந்தரமாக நம்முடன் இறுதி வரை பயணம் செய்வார்களா என்று கேட்டால் அதுவும் நிச்சயம் இல்லை. ஆனால் ஓரளவு அவர்களுடன் நாம் ஒத்துழைத்துதான் பயணம் செய்ய வேண்டும். ஏனெனில் ஓட்டுநருக்கு என்று சில கடமைகள் உள்ளது. அந்த கடமைகளிலிருந்து அவர் விலக முடியாது.
         சரி நாம் இவர்களுடன் எப்படியோ ஒத்துழைத்து பயணம் செய்தாகி விட்டது. ஆனால் அவர்களை சேர்க்கும் இடத்தில் சேர்த்து விட்டு போகலாம் என்று தான் நம்மில் பலரும் நினைப்போம். ஆனால் நடப்பது வேறாக கூட இருக்கலாம். அதனால் நாம் அவர்களுடன் பயணிக்கும் போதே சில பல போதனைகளை வாழ்க்கை பயணத்திற்கு தேவையானதை கற்று கொடுக்க வேண்டும். ஏனெனில் எல்லா நேரமும் ஓட்டுநர் நல்ல உடல் ஆரோக்கியத்தில் இருந்து விடமுடியாது.
       இவ்வாறாக பயணித்து கொண்டே இருக்கும் போது இடையே எங்காவது ஆசைப்பட்டு தங்கி விட்டோம் நம் கதி அதோகதிதான். அதனால் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
        இந்த உலகத்தை நாம் தங்கவந்த சத்திரமாக நினைத்து சிறிது நேர இளைப்பாற மட்டும் பயன்படுத்தி கொண்டு நமது இறுதியில் தங்கும் இடத்திற்கு சென்று விட வேண்டும். அதுதான் நாம் பயணம் செய்வதின் இறுதி லட்சியம். அதைவிடுத்து ஏதாவது ஒரு மாயவலையில் சிக்கிக்கொண்டோம் என்றால் மீள்வது கடினம்.
       அதனால் நேயர்களே நாம் பயணத்தை மிகவும் நேர்த்தியாக பயணம் செய்து ஆனந்தமாக குதூகலிப்பதற்கு இடையில் நமது சேரும் இடத்தை மறந்து விட்டு ஆனந்தத்தை தவற விட வேண்டாம்.
        என்ன நேயர்களே நான் சொல்ல வந்த கருத்தை புரிந்து கொண்டு ஆனந்தமாக வாழ ஆசைபடுவீர்கள் தானே.அப்படியே நடக்க இறைவன் உங்களுக்கு அருள் புரிவாராக! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...