அன்புடையீர் வணக்கம்.
இன்று நாம் பார்க்க இருப்பது ஆறுதல் பற்றி. ஆம். நாம் வாழும் இந்த கலியுகத்தில் எதையோ தேடிதேடி ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் ஓடிக்கொண்டே இருக்கிறோமே தவிர நாம் அந்த ஓடுதலில் என்ன கற்றுக்கொண்டோம் என்பதில் இருக்கிறது நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம். இதை நான் சொல்வதால் நான் ஓடுவதை தவறு என்று சொல்லமாட்டேன்.ஓடுவது தான் நாம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டு.ஆனால் ஓடும் போது நாம் அருகில் இருப்பவர்களையும் அரவணைத்து ஓட வேண்டும். இதுதான் வாழ்க்கை ஓட்டம்.
அதைவிடுத்து ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதைப்போல வெறிப்பிடித்தவர்களைப்போல ஓடுவதால் தான் பிரச்சினை. இந்த ஓட்டம் என்பது நமது வாழ்க்கை மிக அழகாக வாழ்வதற்கு. அந்த ஓட்டம் என்பது விளையாட்டு. அதில் போட்டியாளர்கள் பங்கேற்று விளையாடி அந்தந்த நாட்டிற்கு பெருமை சேர்க்கிறார்கள். ஆனால் இந்த ஓட்டத்தில் வெற்றி என்பது தனிமனிதனின் வெற்றியை சார்ந்தது அல்ல. இது சமுதாய வெற்றியை சார்ந்தது.
இந்த ஓட்டத்தில் நாம் மட்டும் தனித்து ஓடி வெற்றி பெறுவதால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை. மாறாக மற்றவர்களை அரவணைக்க மறந்ததால் அவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுத்து தற்கொலதற்கொலைக்கு கூட நம்மையும் அறியாமல் தூண்டி விடுகிறோம்.
நாம் ஓடும் திறமை அதிகமாக பெற்றிருந்தாலும் நாம் மனிதாபிமானத்தை இழந்து விடக்கூடாது. வெற்றி பெறாதவர்களை குற்றவாளிகள் போல பார்க்காமல் அவர்களுக்கு வார்த்தைகளால் ஆறுதல் சொல்லி ஊக்கப்படுத்த வேண்டும். மிகவும் பொறுமையாக காத்திருந்து அவர்களை ஆதரவாக கைபிடித்து அழைத்து செல்ல வேண்டும்.
இன்றைய சூழலில் பிறந்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை அனைவருக்கும் ஆறுதல் தேவைப்படுகிறது.அதுவும் நமது முட்டாள்த்தனமான ஓட்டத்தால் நாம் மற்றவர்களை அதாவது கொஞ்சம் பலவீனமாக இருப்பவர்களை பயமுறுத்தும் காரியத்தையே செய்து கொண்டு இருக்கிறோம்.இதனால் அவர்கள் மிகவும் மனம் தளர்ச்சி அடைகிறார்கள்.
தளர்ச்சி அடைந்தவர்களை பார்த்து நாம் கேலியாக சிரிக்கிறோம்.நீ எல்லாம் இந்த உலகத்தில் வாழவே தகுதி இல்லை என்று மிரள வைக்கிறோம். அவர்கள் ஏற்கனவே பயந்து போய் இருக்கிறார்கள். நீங்கள் உங்கள் பங்குக்கு கூட கொஞ்சம் மிரள வைக்கிறீர்கள். இது மிகவும் கண்டிக்கதக்கது.
எந்த மனிதனும் முட்டாள் இல்லை. சிலபேர் மிக குறைந்த காலத்தில் புரிந்து கொண்டு முன்னேறுகிறார்கள்.இன்னும் சிலபேர் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுகிறது.அவ்வளவு தான். கால இடைவெளி தான் வித்தியாசம் இங்கே. அதனால் நீங்கள் அவர்களுக்கு ஆறுதல் மொழி கூறி அழைத்து செல்வது உங்கள் கடமையும் பொறுப்பும் ஆகும்.
இன்றைய உலகில் ஆறுதலை தேடி அலைபவர்களை புறக்கணித்தால் நாமும் ஒருநாள் அப்படி தான் வேறு யாரோ ஒருவரால் புறக்கணிக்கப்படுவோம்.இன்றைய தேவை மனிதர்களுக்கு ஆறுதலான வார்த்தை மற்றும் அதனால் ஏற்படும் உற்சாகம் மட்டுமே.
இதைக்கொடுப்பதால் நாம் ஒன்றும் குறைந்து விடமாட்டோம்.மாறாக நமது உள்ளத்திலும் ஒரு உற்சாக அலை ஊற்றெடுக்கும். அப்போது நாமும் ஆனந்தமாக இருப்போம். மற்றவர்களும் ஆனந்தமாக இருப்பார்கள். என்ன நேயர்களே நீங்கள் இப்போது எங்கே கிளம்பி விட்டீர்கள்.ஓ ..ஆறுதல் தேடுபவர்களை தேற்றவா.நல்லது. உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்.

பயனுள்ள பகிர்வு. சிந்திக்க வேண்டிய கருத்துக்கள். நன்றி.
பதிலளிநீக்குமிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் ஐயா 🙏
பதிலளிநீக்கு