ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 4 செப்டம்பர், 2025

கட்சி தப்பி பிழைக்குமா?



 #இன்றையதலையங்கம்:-

சரி ஏதோ தமாக உருவாவதை போல ஒரு கட்சி உருவாக போகிறதோ என்று திரு.செங்கோட்டையன் பேச்சை நேரம் ஒதுக்கி கேட்டால் கட்சியில் பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்ற சாராம்சத்தோடு அந்த உரையை முடித்துக் கொண்டார்... இதற்கு பொதுவெளி தேவையில்லையே...இதை சொல்வதற்கு ஏதோ பெரிய எதிர்பார்ப்பை தொண்டர்களுக்கு கொடுத்து மனம் திறக்கிறேன் என்று ஆவலை தூண்டி அட இதற்கு தானா இந்த முன்னோட்டம் என்று சாதாரண மக்களை நினைக்க வைத்து விட்டது.. ஒரு கட்சியை உடையாமல் பாதுகாக்க வேண்டும் என்ற முன்னெடுப்பு தவறு என்று சொல்லவில்லை.. ஆனால் ஏதோ திட்டமிட்டு காய் நகர்த்துவது போல அல்லவா உள்ளது... நேற்று டிடிவி தினகரன் பிஜேபியில் இருந்து விலகுகிறார்.. இவர்கள் எல்லாம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை எப்படியாவது வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை... ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தனது நிலையில் இருந்து மாறாமல் இருந்தால் இவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைப்பார்களா என்று தெரியவில்லை... கடந்த தேர்தல் தோல்விகள் எல்லாம் கட்சி நிர்வாகிகள் கட்சியின் பொதுச் செயலாளர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பாட்டு தேர்தல் பணியாற்றி இருந்தால் இந்த நிலை வந்து இருக்காது...எவ்வளவோ எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளுக்கு எடுத்துச் சொல்லியும் அவர்கள் தேர்தல் பணியாற்றவில்லை அல்லது தேர்தல் பணியாற்றும் வகையில் கட்சி நிர்வாகிகளை கவனிக்கவில்லை என்று தான் தோன்றுகிறது...எது எப்படியோ ஜெயலலிதா இருந்து இருந்தால் இப்படி கட்சி பணியாற்றாமல் இருந்து இருப்பார்களா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழாமல் இல்லை... எதுவாக இருந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி உணர்ச்சிவசப்பட்டு சமீபமாக பேசி விடுவதையும் நாம் இங்கே குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.. மொத்தத்தில் ஒரு கட்சி தலைமைக்கு அனைவரையும் ஒருங்கிணைத்து வழிநடத்தும் சக்தி கட்சி நிர்வாகிகளை தொண்டர்களை தட்டிக் கொடுத்து அவர்களை நல்ல முறையில் பண்டிகை காலங்களில் பணம் சார்ந்த பலன் கொடுத்து உள்ளூரில் தவிர்க்க முடியாத கட்சி பணியாற்றும் தொண்டர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்களின் மனம் நோகாமல் கவனித்து அவர்களை உற்சாகப்படுத்தி தேர்தல் பணியை விரைவாக இப்போதிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும் கட்சி தலைமை...அதை விளையாட்டு ஒன் மேன் ஆர்மியாக தான் நான் வலம் வருவேன் நான் எவர் சொல்வதையும் காதில் வாங்க மாட்டேன் என்று இருந்தால் அது தொண்டர்களுக்கு ஒரு வித சலிப்பையும் தேர்தலில் வெற்றி வாய்ப்பை தவற விடுவதிலும் போய் முடியும்... இனியும் தாமதிக்காமல் கட்சி யோசிக்குமா இப்போது மூத்த தலைவர் செங்கோட்டையன் வேண்டுக்கோளை கட்சி எப்படி அணுகுகிறது என்பதற்கான பதில் இன்று மாலையோ அல்லது நாளையோகட்சி தலைமையிடமிருந்து கிடைத்து விடும் என்று அரசியல் விமர்சகர்கள் காத்திருக்கிறார்கள்... பார்ப்போம் என்ன நடக்கிறது என்று...

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

05/09/25/வெள்ளிக்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்றைய தலையங்கம்: யார் குற்றவாளிகள்?

  #இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...